/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கடந்த வார விலையை விட இளநீர் விலை ரூ.2 உயர்வு
/
கடந்த வார விலையை விட இளநீர் விலை ரூ.2 உயர்வு
ADDED : மார் 09, 2025 11:15 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை விட இரண்டு ரூபாய் உயர்ந்துள்ளது.
ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:
இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை, கடந்த வார விலையை ஒப்பிடுகையில் இரண்டு ரூபாய் உயர்த்தப்பட்டு, 42 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படுகிறது.
அதன்படி, ஒரு டன் இளநீரின் விலை, 16,500 ரூபாய். இளநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. வரத்து மிகவும் குறைந்து காணப்படுகிறது.
கர்நாடக மாநிலம் மத்துாரில் உற்பத்தியாகும் இளநீர், மார்க்கெட்டில், 48 முதல் 50 ரூபாய் வரை விற்பனையாகிறது. மத்துார் இளநீர் பெரும்பாலும் திப்துார் நெட்டை ரகத்தைச் சேர்ந்தது.
பொள்ளாச்சி இளநீரை விட அளவில் சிறியது. தண்ணீரும் குறைவாகவே இருக்கும். சில வியாபாரிகள், மிகக் குறைவான விலையை நிர்ணயம் செய்து, விபரம் தெரியாத விவசாயிகள் சிலரை ஏமாற்றி இளநீர் வெட்ட முயற்சி செய்கின்றனர்.
அனைத்து விவசாயிகளும், தங்கள் அருகே உள்ள பிற விவசாயிகளிடம் சங்கம் நிர்ணயம் செய்யும் இளநீர் சந்தை நிலவரத்தை எடுத்துக் கூறி, குறைந்த விலைக்கு இளநீரை விற்பதை தவிர்க்க வேண்டும்.
வரக்கூடிய காலங்களில் இளநீர் வரத்து மேலும் கணிசமாக குறையும். அப்போது, இளநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும். இளநீரின் விலை கணிசமாக உயரும் வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகள் நல்ல விலைக்கு இளநீரை விற்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.