/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னை மரங்களை காக்கும் 'டானிக்' உற்பத்தி பெருக கைகொடுக்கிறது
/
தென்னை மரங்களை காக்கும் 'டானிக்' உற்பத்தி பெருக கைகொடுக்கிறது
தென்னை மரங்களை காக்கும் 'டானிக்' உற்பத்தி பெருக கைகொடுக்கிறது
தென்னை மரங்களை காக்கும் 'டானிக்' உற்பத்தி பெருக கைகொடுக்கிறது
ADDED : ஏப் 30, 2024 11:12 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, தென்னை 'டானிக்' குறித்து மாணவியர், விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவியர், 'தென்னை டானிக்' எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து, ஒடையகுளம் பகுதியில் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.
அதில், பொள்ளாச்சியில் தென்னை ஏறக்குறைய, 80 ஆயிரம் ெஹக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது. இவ்வாண்டு பருவமழை பொய்த்ததாலும், எல்நினோ ஆண்டு என்பதாலும், தென்னை விவசாயிகள் வறட்சியை சந்தித்து வருகின்றனர்.
ரசாயன உரங்களை பயன்படுத்துவதற்கு நீரின் தேவை அதிகமாக உள்ளதால், அதை ஈடுகட்டும் வகையில், வளர்ச்சி ஊக்கியான, 'தென்னை டானிக்' உள்ளது.
ஒரு ஆண்டுக்கு இரண்டு பாக்கெட் டானிக்கை, ஆறு மாத இடைவெளயில் வேர் வாயிலாக கொடுக்க வேண்டும். 200 மி.லி., டானிக் ஆனது (120 மி.லி., டானிக், 80 மி.லி., தண்ணீர்) ஒரு மரத்துக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
பென்சில் தடிமன் கொண்ட வேரை தேர்வு செய்து, அதன் நுனிப்பகுதியை வெட்டிய பின், பாலித்தீன் பைகளை பயன்படுத்தி தென்னை டானிக் கரைசலை, வேர்ப்பகுதியில் கட்ட வேண்டும்.
தென்னைக்கு தேவையான ஊட்டச்சத்துகள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த டானிக் என்பதால், இலைகளில் உள்ள பச்சசையின் அளவை அதிகரிக்கிறது. இதன் வாயிலாக, ஒளிச்சேர்க்கை திறனையும் அதிகரிக்கிறது.
குரும்பை உதிர்தலை குறைத்து, பாளைகளின் எண்ணிக்கைய அதிகரிக்கிறது. இதோடு மட்டுமல்லாமல் காய்கள் பெரிதாகுவதற்கும், பருப்பின் எடை கூடுவதற்கும் தென்னை டானிக் உதவுகிறது.
இதை பயன்படுத்துவதன் வாயிலாக, மரத்துக்கு பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது. விளைச்சலானது, 20 சதவீதம் வரை அதிகரிக்கிறது என, மாணவியர் தெரிவித்தனர்.