/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொதுத்தேர்வு முடிவு இம்மாதம் வெளியீடு :மாற்றுச்சான்று தயாரிப்பில் ஆசிரியர்கள்
/
பொதுத்தேர்வு முடிவு இம்மாதம் வெளியீடு :மாற்றுச்சான்று தயாரிப்பில் ஆசிரியர்கள்
பொதுத்தேர்வு முடிவு இம்மாதம் வெளியீடு :மாற்றுச்சான்று தயாரிப்பில் ஆசிரியர்கள்
பொதுத்தேர்வு முடிவு இம்மாதம் வெளியீடு :மாற்றுச்சான்று தயாரிப்பில் ஆசிரியர்கள்
ADDED : ஏப் 30, 2024 11:24 PM
பொள்ளாச்சி:அரசு பள்ளிகளில், 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான மாற்றுச் சான்று தயாரிப்பு பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள், வரும், 6ம் தேதியும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வரும், 10 ம் தேதியும் வெளியிடப்படவுள்ளது.
அவ்வகையில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை பணியும் துவங்க உள்ளது. இந்நிலையில், 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், தினமும், இரு ஆசிரியர்கள், சுழற்சி முறையில், பள்ளிக்கு வரவழைக்கப்படுகின்றனர். அவர்கள், மாணவர்களுக்கான மாற்றுச் சான்று, நன்னடத்தைச் சான்று மற்றும் வருகைப் பதிவு சான்றுகளை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பள்ளித் தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
10 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளி மற்றும் கல்லுாரிக்கு சேர்வார்கள். இதேபோல, தேர்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டால், ஒவ்வொரு பள்ளிக்கும் மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் பட்டியல் வந்து சேரும்.
அப்போது, 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மாற்றுச் சான்று மற்றும் நன்னடத்தைச் சான்றுடன் தற்காலிக மதிப்பெண் சான்றும் இணைத்து வழங்கப்படும். அவர்கள் உயர் கல்வியில் சேர உள்ளதால் வருகைப் பதிவு சான்றும் வழங்கப்படும். இதற்கான பணியை, ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறு, கூறினர்.