/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கணவன், மனைவிக்கு இடையே உள்ள உறவு சிறந்ததாக இருக்கணும்'
/
'கணவன், மனைவிக்கு இடையே உள்ள உறவு சிறந்ததாக இருக்கணும்'
'கணவன், மனைவிக்கு இடையே உள்ள உறவு சிறந்ததாக இருக்கணும்'
'கணவன், மனைவிக்கு இடையே உள்ள உறவு சிறந்ததாக இருக்கணும்'
ADDED : மார் 04, 2025 06:31 AM

'வாகை சூடு' நிகழ்ச்சியில், 'மைண்ட் பிரெஷ்' நிறுவனர் கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி, மாணவியர் மத்தியில் பேசியதாவது:
நீங்கள் உங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் யார் என்பதை உணர வேண்டும். உங்களுக்குள் பல திறன்கள் இருக்கும். அதை கண்டறிய வேண்டும். உங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் எனில், அடுத்தவர்கள் சொல்லும் தேவையில்லாத விசயங்களை கருத்தில் கொள்ளக்கூடாது.
வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும், ஒரு உறவு இருக்கும். அனைத்து உறவுகளையும் பின்பற்ற முடியாவிட்டாலும், ஒரு சில உறவுகளை பின்பற்றுவது அவசியம்.
உங்களை முதலில் உங்களுக்கு பிடிக்க வேண்டும். உங்களை சுயமதிப்பீடு செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு உறவுடனும் பிணைப்பு இருக்கும். அனைத்து உறவுகளை காட்டிலும் உங்களுடன், உங்களுக்கு இருக்கும் உறவே சிறந்தது.
கணவன், மனைவிக்கு இடையே உள்ள உறவு சிறந்ததாக இருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான உறவுகள் அன்பையும், பாசத்தையும் கொடுப்பதில்லை. உங்களுடன் உள்ள நெருங்கிய உறவு தோற்றால் சிக்கல் தான். கல்யாணம், காதல் ஆகிய உறவு சரியில்லை எனில், அது பாதுகாப்பு இல்லாததாக மாறும். எதையும் பகிர்ந்து செய்தால் அது எப்போதும் சிறந்ததாக இருக்கும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், அவினாசிலிங்கம் பல்கலையில், நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.