/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கந்தலான கக்கடவு ரோடு; வாகன ஓட்டுநர்கள் அவதி
/
கந்தலான கக்கடவு ரோடு; வாகன ஓட்டுநர்கள் அவதி
ADDED : ஆக 29, 2024 10:07 PM

கிணத்துக்கடவு : செங்குட்டைபாளையம் -- கக்கடவு செல்லும் ரோடு சிதிலமடைந்து காணப்படுவதால், வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர்.
கிணத்துக்கடவு, வரதனூர் ஊராட்சிக்கு உட்பட்ட செங்குட்டைபாளையத்தில் இருந்து, கக்கடவு செல்லும் ரோடு, நான்கு கி.மீ., தொலைவு உள்ளது. இந்த ரோட்டில், தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இவ்வழியில் சிறிய அளவிலான நிறுவனங்கள் செயல்படுவதாலும், வாகனங்களில் விவசாயிகள் விளை பொருட்களை ஏற்றிச் செல்வதாலும் போக்குவரத்து அதிகம் உள்ளது.
இப்படியிருக்க, இந்த ரோட்டில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டும், புதர் நிறைந்தும் உள்ளது. ரோடும் குறுகலாக உள்ளது. எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட முடியாத நிலை உள்ளது.
இரவு நேரத்தில் செல்லும் போது, போதிய அளவு மின்விளக்கு வசதிகள் இல்லாததால் மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே, இந்த ரோட்டை சீரமைத்து, மின்விளக்கு வசதி ஏற்படுத்த உரிய நடவடிக்கை வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.