/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேற்கு குறுமைய த்ரோபால்; கலக்கியது சவுடேஸ்வரி பள்ளி
/
மேற்கு குறுமைய த்ரோபால்; கலக்கியது சவுடேஸ்வரி பள்ளி
மேற்கு குறுமைய த்ரோபால்; கலக்கியது சவுடேஸ்வரி பள்ளி
மேற்கு குறுமைய த்ரோபால்; கலக்கியது சவுடேஸ்வரி பள்ளி
ADDED : ஆக 22, 2024 12:46 AM
கோவை : மேற்கு குறுமைய அளவிலான, மாணவர்கள் த்ரோபால் போட்டியில், ஸ்ரீ சவுடேஸ்வரி வித்யாலயா மாடல் பள்ளி அணி மாணவர்கள், அபாரமாக விளையாடி அனைத்து பிரிவுகளிலும் வெற்றி பெற்றனர்.
கோவை கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட, மேற்கு குறுமைய விளையாட்டு போட்டி, தொண்டாமுத்துார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில், பாரதியார் பல்கலையில் நடக்கிறது.
இதில் பங்கேற்ற, ஸ்ரீ சவுடேஸ்வரி வித்யாலயா மாடல் பள்ளி மாணவர்கள், த்ரோபால் 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோர் ஆகிய மூன்று பிரிவுகளிலும், வெற்றி பெற்றனர்.
இறுதிப்போட்டியில் சவுடேஸ்வரி பள்ளி அணி, 14 வயது பிரிவில் 15 - 1, 17 வயது பிரிவில் 15 - 8, 19 வயது பிரிவில் 15 - 2 ஆகிய புள்ளிக்கணக்கில், கிரகாம் ஸ்டேன்ஸ் பள்ளியை வீழ்த்தியது. மூன்று பிரிவுகளிலும், கிரகாம் ஸ்டேன்ஸ் பள்ளி அணி இரண்டாம் இடம் பிடித்தது.