/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
களமிறங்கி பலம் காட்டி அசத்திய பள்ளி மாணவர்கள் ;குறுமைய விளையாட்டு போட்டியில் அபாரம்
/
களமிறங்கி பலம் காட்டி அசத்திய பள்ளி மாணவர்கள் ;குறுமைய விளையாட்டு போட்டியில் அபாரம்
களமிறங்கி பலம் காட்டி அசத்திய பள்ளி மாணவர்கள் ;குறுமைய விளையாட்டு போட்டியில் அபாரம்
களமிறங்கி பலம் காட்டி அசத்திய பள்ளி மாணவர்கள் ;குறுமைய விளையாட்டு போட்டியில் அபாரம்
ADDED : ஆக 23, 2024 01:15 AM

பொள்ளாச்சி கிழக்கு மற்றும் கோட்டூர் குறுமையம் அளவிலான போட்டிகளில், மாணவர்கள் அபாரமாக விளையாடினர்.
பொள்ளாச்சி கிழக்கு குறுமைய அளவிலான போட்டிகள், மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில் நடக்கிறது. ஹேண்ட்பால் போட்டியில், 14 வயது பிரிவில், பொள்ளாச்சி எல்.எம்.எச்.எஸ்., பள்ளி முதலிடமும், 17 வயது பிரிவில் காளியண்ணன்புதுார் அரசு பள்ளி முதலிடமும் பெற்றன.
19 வயது பிரிவில், லட்சுமிநாயக்கன்பாளையம் எஸ்.ஆர்.என்.வி., பள்ளி முதலிடமும், 14, 17 வயது பிரிவில் இரண்டாமிடமும் இப்பள்ளி பெற்றது. 19 வயது பிரிவில், பழனிக்கவுண்டர் பள்ளி இரண்டாமிடம் பெற்றது.
பேஸ்கட்பால் போட்டியில், பொள்ளாச்சி விஸ்வதீப்தி மெட்ரிக் பள்ளி, 14, 19 வயது பிரிவில் முதலிடமும், 17 வயது பிரிவில் இரண்டாமிடத்தையும் பெற்றது. எல்.எம்.எச்.எஸ்., பள்ளி 17 வயது பிரிவில் முதலிடத்தையும், 14 வயது பிரிவில் இரண்டாமிடமும் பெற்றது. 19 வயது பிரிவில் எஸ்.ஆர்.என்.வி., பள்ளி இரண்டாமிடம் பெற்றது.
* சிறுகளந்தை விக்னேஸ்வரா மெட்ரிக் பள்ளியில், மாணவியருக்கான டென்னிகாய்ட் போட்டிகள் நடந்தது. 14வயது ஒற்றையர் பிரிவில், மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், ஆதித்யா மெட்ரிக் பள்ளி இரண்டாமிடமும்; 17 வயது பிரிவில், கஞ்சம்பட்டி அரசு பள்ளி முதலிடமும், விஸ்வதீப்தி பள்ளி இண்டாமிடமும் பெற்றன.
இரட்டையர் பிரிவில், வடசித்துார் அரசு பள்ளி, 14 மற்றும் 19 வயது பிரிவில் முதலிடம் பெற்றது. 17 வயது பிரிவில், கஞ்சம்பட்டி அரசு பள்ளி முதலிடம் பெற்றது.
விஸ்வதீப்தி மெட்ரிக் பள்ளி, 14,17 வயது பிரிவில், இரண்டாமிடம் பெற்றது. 19 வயது பிரிவில் மாரியம்மாள் பெண்கள் பள்ளி இரண்டாமிடம் பெற்றது.
* கோட்டூர் குறுமைய போட்டிகளை, திவான்சாபுதுார் அரசு பள்ளி நடத்துகிறது. கேரம் போட்டியில், 14 வயது ஒற்றையர் பிரிவில், அன்னை மெட்ரிக் பள்ளி முதலிடமும், சேத்துமடை அரசு பள்ளி இரண்டாமிடமும் பெற்றன. இரட்டையர் பிரிவில், ஒடையகுளம் அரசு பள்ளி முதலிடமும், ஸ்ரீ விக்னேஸ்வரா இரண்டாமிடமும் பெற்றன.
17 வயது ஒற்றையர் பிரிவில், பாரஸ்ட் ஹில்ஸ் அகாடமி பள்ளி முதலிடமும், ஆழியாறு அரசு பள்ளி இரண்டாமிடமும் பெற்றன. இரட்டையர் பிரிவில் அன்னை மெட்ரிக் பள்ளி முதலிடமும், ஸ்ரீ விக்னேஸ்வரா பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.
19 வயது ஒற்றையர், இரட்டையர் பிரிவில், கோட்டூர் அரசு பள்ளி முதலிடம் பெற்றது. ஒற்றையர் பிரிவில், ஸ்ரீ லட்சுமி பள்ளியும், இரட்டையர் பிரிவில் சோமந்துறைசித்துார் அரசு பள்ளியும் இரண்டாமிடம் பெற்றன.
வாலிபால் போட்டியில், 14, 17, 19வயது பிரிவில் ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., பள்ளி முதலிடமும், 14 வயது பிரிவில் சேத்துமடை அரசு பள்ளியும், 17 வயது பிரிவில் சின்கோனா அரசு பள்ளியும், 19வயது பிரிவில் வால்பாறை அரசு ஆண்கள் பள்ளியும் இரண்டாமிடம் பெற்றன.
* மாணவியர் 14வயது ஒற்றையர் பிரிவில், வால்பாறை துாய இருதய பள்ளி முதலிடமும், ஸ்ரீ மகாத்மா பள்ளி இரண்டாமிடமும்; இரட்டையர் பிரிவில், ஸ்ரீ மகாத்மா பள்ளி முதலிடமும், கோட்டூர் அரசு பெண்கள் பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.
17 வயது ஒற்றையர் பிரிவில், அன்னை மெட்ரிக் பள்ளி முதலிடமும், ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி இரண்டாமிடமும் பெற்றன. இரட்டையர் பிரிவில் அட்டக்கட்டி அரசு பள்ளி முதலிடமும், அன்னை மெட்ரிக் பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.
19 வயது ஒற்றையர், இரட்டையர் பிரிவில் கோட்டூர் அரசு பெண்கள் பள்ளி முதலிடம் பெற்றது. இரு பிரிவிலும் அட்டக்கட்டி அரசு பள்ளி இரண்டாமிடம் பெற்றது.
வாலிபால் போட்டியில், 14வயது பிரிவில் சேத்துமடை அரசு பள்ளி முதலிடமும், காளியாபுரம் பழனியம்மாள் பள்ளி இரண்டாமிடமும், 17 வயது பிரிவில் சேத்துமடை அரசு பள்ளி முதலிடமும், பாரஸ்ட் ஹில்ஸ் பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.19வயது பிரிவில், பழனியம்மாள் பள்ளி முதலிடமும் பெற்றன.
உடுமலை
உடுமலை குறுமைய அளவிலான பால்பேட்மிட்டன் போட்டி, வித்யாசாகர் கல்லுாரியில் நடந்தது. மாணவர்களுக்கான போட்டி ஜூனியர், சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் பிரிவுகளில் புங்கமுத்துார் காந்திகலா நிலையம் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்தது.
ஜூனியர் பிரிவில், ஜல்லிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அணியும், சீனியர் பிரிவில் பள்ளபாளையம் ஆதர்ஷ் மெட்ரிக் பள்ளி அணியும், சூப்பர்- சீனியர் பிரிவில் கொங்கல்நகரம் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணியும் இரண்டாமிடம் பெற்றன.
மாணவியருக்கான போட்டியில், ஜூனியர் பிரிவில் விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடம், மடத்துக்குளம் ஜே.எஸ்.ஆர்., மெட்ரிக் பள்ளி இரண்டாமிடம் பெற்றன.
சீனியர் பிரிவில், பெதப்பம்பட்டி என்.வி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணி முதலிடம்,ஜல்லிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடம் பெற்றன.
சூப்பர் சீனியர் பிரிவில், காந்திகலா நிலையம் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி முதலிடம், ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணி இரண்டாமிடம் பெற்றன.
ஹாக்கி போட்டி
மாணவியருக்கான ஹாக்கிப்போட்டி, உடுமலை நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. சூப்பர் சீனியர் பிரிவில், குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி., மேல்நிலைப்பள்ளி முதலிடம் பெற்றது.
சீனியர் மற்றும் ஜூனியர் பிரிவில், லுார்து மாதா பள்ளி அணி முதலிடம் பெற்றது. ஜூனியர், சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் உள்ளிட்ட மூன்று பிரிவுகளிலும், பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அணி இரண்டாமிடம் பெற்றது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு, பள்ளி நிர்வாகத்தினர், உடற்கல்வி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.