/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் நாளை 'பேலட் ஷீட்' பொருத்தும் பணி
/
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் நாளை 'பேலட் ஷீட்' பொருத்தும் பணி
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் நாளை 'பேலட் ஷீட்' பொருத்தும் பணி
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் நாளை 'பேலட் ஷீட்' பொருத்தும் பணி
ADDED : ஏப் 09, 2024 12:42 AM
கோவை;கோவை லோக்சபா தொகுதியில் பயன்படுத்த உள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கம்ப்யூட்டர் குலுக்கல் நடத்தி, ஓட்டுச்சாவடி வாரியாக நேற்று ஒதுக்கப்பட்டது.
கோவை லோக்சபா தொகுதியில், 2,048 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. இம்முறை, 37 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், மூன்று மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
தேவையான இயந்திரங்கள், 'பெல்' இன்ஜினியர்கள் மூலம் சரிபார்க்கப்பட்டு, அந்தந்த சட்டசபை தொகுதிகளின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதில், பல்லடம் தொகுதிக்கு - 412, சூலுார் - 329, கவுண்டம்பாளையம் - 435, கோவை வடக்கு - 298, கோவை தெற்கு - 251, சிங்காநல்லுார் - 323 என, மொத்தம், 2,048 ஓட்டுச்சாவடிகள் அமைகின்றன.
எந்த ஓட்டுச்சாவடிக்கு எந்த எண்ணுள்ள, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் அனுப்புவது என்பது குலுக்கல் முறையில் முடிவு செய்யப்படும்.
அந்நிகழ்வு, கோவை கலெக்டர் அலுவலகத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று நடந்தது.
கம்ப்யூட்டர் வாயிலாக குலுக்கல் முறையில், ஒவ்வொரு தொகுதிக்கும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டன.
நாளை (10ம் தேதி) முதல், இவ்வியந்திரங்களில், 'பேலட் ஷீட்' பொருத்த, தேர்தல் பிரிவினர் திட்டமிட்டுள்ளனர்.

