/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அத்திக்கடவு குழாயில் உடைப்பு சரி செய்தது குடிநீர்வாரியம்
/
அத்திக்கடவு குழாயில் உடைப்பு சரி செய்தது குடிநீர்வாரியம்
அத்திக்கடவு குழாயில் உடைப்பு சரி செய்தது குடிநீர்வாரியம்
அத்திக்கடவு குழாயில் உடைப்பு சரி செய்தது குடிநீர்வாரியம்
ADDED : மே 04, 2024 12:28 AM

தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூர், நரசீபுரம் மெயின்ரோட்டில், அத்திக்கடவு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதை, குடிநீர் வடிகால் வாரியத்தினர் சீர்செய்தனர்.
தொண்டாமுத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில், சுமார், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், சிறுவாணி மற்றும் அத்திக்கடவு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கெம்பனூர் சாலையில் உள்ள நீர்தேக்க தொட்டிக்கு நீர் கொண்டு செல்வதற்காக, தொண்டாமுத்தூர், நரசீபுரம் மெயின்ரோட்டில் பதிக்கப்பட்டிருந்த, 140 மி.மீ., விட்டமுள்ள குழாயில், அதிக அழுத்தம் காரணமாக, உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடிநீர் பெருக்கெடுத்து ஓடியது. குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்கள், குழாய் உடைப்பை நேற்று மாலை சரி செய்தனர்.