/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வந்த வேலை முடிஞ்சாச்சு; துணை ராணுவம் புறப்பட்டாச்சு
/
வந்த வேலை முடிஞ்சாச்சு; துணை ராணுவம் புறப்பட்டாச்சு
வந்த வேலை முடிஞ்சாச்சு; துணை ராணுவம் புறப்பட்டாச்சு
வந்த வேலை முடிஞ்சாச்சு; துணை ராணுவம் புறப்பட்டாச்சு
ADDED : ஏப் 24, 2024 10:15 PM

கோவை : கோவையில் இருந்து, 3 கம்பெனிகள் புறப்பட்டு சென்றன.
லோக்சபா தேர்தல் கடந்த, 19ம் தேதி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதையொட்டி, கோவை மாவட்டத்தில் துணை ராணுவ படையினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதற்காக, 5 கம்பெனி துணை ராணுவ படையினர் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் தினந்தோறும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதோடு, தேர்தல் அதிகாரிகளுடன் இணைந்து சோதனையிலும் ஈடுபட்டனர். தேர்தல் முடிந்ததையொட்டி தற்போது, 3 கம்பெனிகள் கோவையில் இருந்து புறப்பட்டு சென்றனர்.
இதுகுறித்து, துணை ராணுவ படை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கோவையில் இருந்து, 3 கம்பெனிகள் புறப்பட்டு சென்று விட்டனர். ஒரு கம்பெனி மதுரை சென்று, அங்கிருந்து குஜராத் செல்கிறார்கள்.
ஒரு கம்பெனி, அவர்கள் வந்த இடத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன.
மற்றொரு கம்பெனி, கேரளாவுக்கு சென்றுள்ளது. மீதமுள்ள இரண்டு கம்பெனிகளில், ஒன்று கோவை அரசு தொழில்நுட்பக் கல்லுாரி வாக்கு என்னும் மையத்தில் உள்ள ஸ்ட்ராங் ரூமிலும், மற்றொரு கம்பெனி பொள்ளாச்சி மகாலிங்கம் கல்லுாரி ஸ்ட்ராங் ரூமிலும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்' என்றார்.

