/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழங்குடி மக்கள் எவ்வளவு பேர் கணக்கெடுக்கும் பணி துவக்கம்
/
பழங்குடி மக்கள் எவ்வளவு பேர் கணக்கெடுக்கும் பணி துவக்கம்
பழங்குடி மக்கள் எவ்வளவு பேர் கணக்கெடுக்கும் பணி துவக்கம்
பழங்குடி மக்கள் எவ்வளவு பேர் கணக்கெடுக்கும் பணி துவக்கம்
ADDED : ஆக 09, 2024 09:54 PM
கோவை:தமிழக பழக்குடியினர் நலத்துறை சார்பில், பழங்குடி மக்களின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுக்கும் பணி துவங்கி உள்ளது.
தமிழகம் முழுவதும் நடக்கும் இந்த பணியில், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணி செய்த தன்னார்வளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் 133 பேர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை, காரமடை, பெரியநாயக்கன் பாளையம், சர்க்கார் சாமக்குளம், சூலுார், சுல்தான்பேட்டை உள்ளிட்ட 14 பகுதிகளில், இந்த கணக்கெடுப்பு நடந்து வருகிறது.
கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகையில், 'மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011க்கு பிறகு எடுக்கப்படவில்லை. பழங்குடி மக்களுக்கு நலத்திட்டப் பணிகளை செயல்படுத்தவே இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடந்த 10 நாட்களில், 2500 பழங்குடி குடும்பங்களின் எண்ணிக்கை மற்றும் சமூக பொருளாதாரம் மற்றும் கல்வி நிலை குறித்த விபரங்களை சேகரித்து இருக்கிறோம்' என்றனர்.

