/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி மாணவர் கொலை: முன்விரோதத்தால் இளைஞர்கள் வெறி
/
பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி மாணவர் கொலை: முன்விரோதத்தால் இளைஞர்கள் வெறி
பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி மாணவர் கொலை: முன்விரோதத்தால் இளைஞர்கள் வெறி
பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி மாணவர் கொலை: முன்விரோதத்தால் இளைஞர்கள் வெறி
ADDED : மே 14, 2024 01:43 AM

சிட்லப்பாக்கம், மே 14-
சென்னை அடுத்த கிழக்கு தாம்பரம், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் உதயா என்கிற உதயகுமார், 24. பள்ளிக்கரணையில் உள்ள தனியார் கல்லுாரியில், எம்.பி.ஏ., முதலாம் ஆண்டு படித்து வந்தார். மேலும், 'ஆன்லைன்' நிறுவன உணவு டெலிவரி செய்யும் வேலையும் செய்து வந்தார்.
இவர், நேற்று முன்தினம் பகல் 12:30 மணிக்கு, சிட்லப்பாக்கம், சேது நாராயணன் சாலையில், தன் தோழியுடன், 'ஸ்பிளன்டர்' பைக்கில் சென்றார். அப்போது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், உதயாவின் வாகனத்தை மடக்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதை கண்டுக்கொள்ளாமல், உதயா வாகனத்தை இயங்கினார். அப்போது, மர்ம நபர்கள் அந்த வாகனத்தின் மீது மோதினர். இதில் உதயாவும் அவரது தோழியும் கீழே விழுந்தனர். அந்நேரம், உதயாவை மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மர்ம நபர்கள் வெட்டினர். கையில் வெட்டு விழுந்ததும், தன்னை காப்பாற்றிக்கொள்ள உதயா அருகேயுள்ள குடியிருப்பு பகுதிக்கு ஓடினார்.
மர்ம நபர்கள் விரட்டி சென்று, தலையில் உள்ள இடங்களில் சரமாரியாக வெட்டி தப்பினர். இதில், படுகாயமடைந்து உயிருக்கு போராடிய உதயாவை, குடியிருப்புவாசிகள் மீட்டு 108 ஆம்புல்னஸ் வாயிலாக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதற்கிடையில், உதயாவை வெட்டிய, சேலையூர் அடுத்த மப்பேடு பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் நரேஷ், 22, தனியார் கல்லுாரியில், பி.பி.ஏ., முதலாம் ஆண்டு மாணவர் கிருஷ்ணா, 19, ஆகியோர், சேலையூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
மற்றொரு நபரான, மப்பேடு பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லுாரியில், பி.எஸ்.சி., முதலாம் ஆண்டு படித்து வந்த சாந்தகுமார், 19, என்பவரை, போலீசார் கைது செய்தனர். விசாரணையில், நான்கு மாதங்களுக்கு முன், வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில், உதயா நரேைஷ தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில், நண்பர்களுடன் சேர்ந்து உதயாவை வெட்டியது தெரியவந்தது. பின், மூன்று பேர் மீது, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, நேற்று முன்தினம் சிறையில் அடைந்தனர்.
இந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உதயா, நேற்று காலை உயிரிழந்தார். இதையடுத்து, சிட்லப்பாக்கம் போலீசார், இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து விசாரிக்கின்றனர்.

