/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாக்காளர்களின் 'பூத் சிலிப்பில்' படம் கிடையாது! ஏப்., 16க்குள் வழங்க உத்தரவு
/
வாக்காளர்களின் 'பூத் சிலிப்பில்' படம் கிடையாது! ஏப்., 16க்குள் வழங்க உத்தரவு
வாக்காளர்களின் 'பூத் சிலிப்பில்' படம் கிடையாது! ஏப்., 16க்குள் வழங்க உத்தரவு
வாக்காளர்களின் 'பூத் சிலிப்பில்' படம் கிடையாது! ஏப்., 16க்குள் வழங்க உத்தரவு
ADDED : மார் 31, 2024 01:48 AM

கோவை;கோவை லோக்சபா தொகுதியில் ஓட்டுப்போடுவதற்கு வாக்காளர்களுக்கு வழங்குவதற்கான பூத் சிலிப் அச்சடிக்கப்பட்டு, சட்டசபை தொகுதி வாரியாக வினியோகிக்கப்படுகிறது. இம்முறை புகைப்படம் இல்லாமல் பூத் சிலிப் தயாரிக்கப்பட்டுள்ளது.
கோவை லோக்சபா தொகுதியில், 20.83 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கு ஓட்டுச்சாவடி வாரியாக புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப் அச்சடிக்கப்பட்டு, அந்தந்த ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக, வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கப்படும். ஏப்., 19 அன்று ஓட்டுப்பதிவு நடைபெறும்; 16ம் தேதிக்குள் வினியோகிக்க, அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
அந்தந்த சட்டசபை தொகுதிகளில், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முன்னிலையில், பூத் சிலிப்புகள் அச்சிடப்பட்டு, ஒவ்வொரு ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கும் பிரித்து அனுப்பப்படுகிறது.
ஓட்டுச்சாவடி அமைந்துள்ள இடத்தை அறிந்து கொள்வதற்காக, 'க்யூஆர்' கோடு அச்சிடப்பட்டுள்ளது. தங்களது மொபைல்போனில், அதை ஸ்கேன் செய்தால், எந்த இடத்தில் ஓட்டுப்போட வேண்டும் என்பதை, எளிதில் கண்டறியலாம்.
தேர்தல் பிரிவினர் கூறுகையில், 'ஏப்., 16க்குள் வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று வழங்க வேண்டும். அதனால், இப்போதே பிரிண்ட் எடுத்து, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு அனுப்பி வருகிறோம். அவர்கள் வீடு, வீடாகச் சென்று வழங்குவர்.
இதற்கு முந்தைய தேர்தல்களில் வழங்கிய பூத் சிலிப்களில், வாக்காளர்களின் புகைப்படம் அச்சிடப்பட்டது. வாக்காளர்களின் விபரம் தெரியக் கூடாது என்பதற்காக, இம்முறை புகைப்படம் தவிர்க்கப்பட்டுள்ளது.
'க்யூஆர்' கோடு ஸ்கேன் செய்தால், வாக்காளர் பற்றிய முழு விபரம் தெரியவரும். அவர் ஓட்டுப்போட வேண்டிய ஓட்டுச்சாவடியின் அமைவிடம், பூத் எண், பார்ட் எண் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் அறியலாம்' என்றனர்.

