/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போத்தனுார் செட்டிபாளையம் ரோட்டில் வேகத்தடை வேண்டும்
/
போத்தனுார் செட்டிபாளையம் ரோட்டில் வேகத்தடை வேண்டும்
போத்தனுார் செட்டிபாளையம் ரோட்டில் வேகத்தடை வேண்டும்
போத்தனுார் செட்டிபாளையம் ரோட்டில் வேகத்தடை வேண்டும்
ADDED : ஏப் 29, 2024 02:05 AM

கோவை;கோவை போத்தனுார் செட்டிபாளையம் ரோட்டில் விபத்து நடப்பதை தடுக்க, வேகத்தடை அமைக்க வேண்டும் என, போத்தனுார் ரயில் பயனாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, சங்கத்தின் பொதுச்செயலாளர் சுப்பிரமணியன் கூறியதாவது:
போத்தனுார் ஸ்ரீனிவாசா நகர் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள், செட்டிப்பாளையம் ரோட்டில் திரும்பும் போது விபத்து நடக்கிறது. செட்டிப்பாளையம் ரோட்டில் வரும் வாகனங்கள், அதிவேகமாக வருவதே விபத்துக்கு காரணம். அதனால், அந்த இரண்டு ரோட்டிலும், வேகத்தடை அமைக்க வேண்டும்.
அதே போல் போத்தனுார் மேட்டூர் விநாயகர் கோவில் அருகிலும், வெள்ளலுார் ரோட்டிலும், போத்தனுார் ரயில் கல்யண மண்டபம் அருகிலும், சுந்தராபுரம் செல்லும் ரோட்டிலும் வேகத்தடை அமைக்க வேண்டும்.
இங்குதான் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு, கடிதம் வாயிலாகவும் வீடியோ பதிவு வாயிலாவும் புகார் அனுப்பி இருக்கிறோம். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை.
இவ்வாறு, அவர்கூறினார்.

