/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் துவங்கியது 'தினமலர்' ஷாப்பிங் திருவிழா! ஆனந்தமா வாங்க... அள்ளிட்டுப் போங்க!
/
கோவையில் துவங்கியது 'தினமலர்' ஷாப்பிங் திருவிழா! ஆனந்தமா வாங்க... அள்ளிட்டுப் போங்க!
கோவையில் துவங்கியது 'தினமலர்' ஷாப்பிங் திருவிழா! ஆனந்தமா வாங்க... அள்ளிட்டுப் போங்க!
கோவையில் துவங்கியது 'தினமலர்' ஷாப்பிங் திருவிழா! ஆனந்தமா வாங்க... அள்ளிட்டுப் போங்க!
UPDATED : ஆக 15, 2024 11:47 AM
ADDED : ஆக 15, 2024 05:36 AM

கோவை : இல்லத்தரசிகள், ஆண்கள், குட்டீஸ், என அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும், 'தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' வீட்டு உபயோகப் பொருள் கண்காட்சி, கோவை கொடிசியா வளாகத்தில், இன்று கோலாகலமாக துவங்கியது.
வழக்கத்தை விட திக்குமுக்காட வைக்கும் ஆபர்கள், புதிய வரவுகள் நான்கு நாட்களும் உங்களை சந்தோஷத்தில் திணறடிக்கக் காத்திருக்கிறது.
300 அரங்குகள்; முத்தான தேர்வுகள்
தினமலர்- நாளிதழ் மற்றும் சத்யா நிறுவனம் சார்பில் நடக்கும் இக்கண்காட்சியில், 300க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்டால்களில், இல்லத்தரசிகளின் விருப்பத்துக்கேற்ற சமையலறை சார்ந்த பொருட்கள், புதுப்புது கிச்சன் கேட்ஜெட்கள், நவீன சமையல் உபகரணங்கள், வீட்டைத் தூய்மைப்படுத்துவதில் இருந்து, விதவிதமாக அழகுபடுத்துவது வரை எல்லாமே கிடைக்கும்.
டி.வி., பிரிஜ், வாஷிங்மெஷின், மிக்ஸி, கிரைண்டர், மின் அடுப்புகள், மைக்ரோ வேவ் அவன், எண்ணெய் இல்லாமல் பொரிக்கும் பிரையர், ஸ்டவ், டைனிங் டேபிள், வார்ட்ரோப், சோபா செட், ஊஞ்சல், டீ பாய், கட்டில், மெத்தை, டிரஸ்ஸிங் டேபிள், கம்ப்யூட்டர் டேபிள், குட்டீஸ் படிக்க ஸ்டடி டேபிள், வீட்டிலேயே அலுவலகம் போல செயல்பட, ஒர்க் ஸ்டேஷன், ஜன்னல்களுக்கு திரைச்சீலை, கொசுவலை என, வீடும் மனசும் நிறையும் அளவுக்கு, வாங்கிச் செல்ல பொருட்கள் ஏராளமாக உண்டு.
ஆடைகளை அள்ளலாம்
வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கியாச்சு... அப்படியே ஆடை பக்கம் பார்க்கலாம் என்றால், ஒவ்வொரு மாநிலங்களின் பிரத்யேகமான ஆடைகள், புத்தம் புது டிசைன்களில் சேலைகள், சுடிதார், லெகின்ஸ், பலாஸோ, டி--ஷர்ட் உள்ளிட்ட ஆயத்த ஆடைகள், விதவிதமான மெட்டீரியல்கள் ஸ்டால்களில் இடம்பெற்றுள்ளன.
அழகுக்கு அழகு சேர்க்கும் வெரைட்டியான அழகு சாதனப் பொருட்கள், சரும ஆரோக்கியத்துக்கான பொருட்கள், வாசனைத் திரவியங்கள், கூந்தல் ஆரோக்கியத்துக்கான இயற்கைப் பொருட்கள், நூற்றுக்கணக்கான ஆபரணங்கள், டிசைனர் நகைகள் இடம் பெற்றுள்ளன.
கனவு இல்லம்
சொந்த வீட்டுக் கனவை நனவாக்க, ரியல் எஸ்டேட் ஸ்டால்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும். தனி வீடு, அபார்ட்மென்ட், வீட்டு மனை, வில்லா என உங்கள் வசதிக்கேற்ப தேர்வு செய்யலாம். முதலீடு செய்யும் எண்ணத்தில் இருக்கிறீர்களா... உங்களுக்கும் ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. வங்கிக் கடன் வசதியுடன் இவையெல்லாம் சாத்தியமாக, தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறது.
நாவுக்கும் உண்டு வேலை
சோறு முக்கியம் பாஸ் என்பவரா நீங்கள்.... கொரியன் உணவு வகைகளில் இருந்து உள்ளூர் பணியாரம் வரை விதவிதமான உணவு வகைகளை ருசிக்கலாம். 99 வகையான தோசை, மோமோஸ், பன்னீர் பிராங்கி, பரோட்டா, பாஸ்தா, பர்கர் என வகை வகையான உணவுகள் உங்களுக்காக காத்திருக்கின்றன.
மட்டன், சிக்கன், கரண்டி ஆம்லெட், சிக்கன் லாலிபாப், பெப்பர் சிக்கன், பிரைடு சிக்கன் என சுடச் சுட அள்ளிக்கட்டலாம். உணவு அரங்கில் மட்டும் 20க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
வாகன யோகம்
இந்த வருஷம் புது வண்டி வாங்க நினைக்கிறீர்களா... பிரத்யேக ஆபர்களுடன் ஸ்கூட்டர்கள், டாப் மாடல் பைக்குகள், எலெக்ட்ரிக் வாகனங்கள், கார்கள் என அனைத்தும் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
இன்று முதல் நான்கு நாட்களுக்கும், இனி ஷாப்பிங் திருவிழாதான். காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை கண்காட்சி நடக்கும்.
குடும்பத்தோட வாங்க... குதுாகலமா ஷாப்பிங் பண்ணுங்க!