ADDED : ஜூலை 25, 2026 06:22 PM
அ நிறம் | அளவு
கோவை: பாலக்காடு, போத்தனுார், ஈரோடு, சேலம் வழியாக திருவனந்தபுரம் சென்ட்ரல்–சென்னை சென்ட்ரல் இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.
இந்நிலையில், திருவனந்தபுரத்தில் இருந்து நேற்றிரவு 7:15க்கு சென்னை புறப்பட வேண்டிய ரயிலின்(12698) நேரமானது இணை ரயில் தாமதத்தால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 16 மணி நேரம் 45 நிமிடங்கள் தாமதமாக இன்று மதியம் 12:00க்கு திருவனந்தபுரத்தில் இருந்து ரயில் புறப்படும். போத்தனுார் உள்ளிட்ட ஸ்டேஷன்கள் வந்தடைவதில் தாமதமாகும் என, சேலம் ரயில்வே தெரிவித்துள்ளது.
