ADDED : ஆக 06, 2026 06:52 PM
கண்காட்சி மற்றும் உணவு திருவிழா கோவை சுதேசி எக்ஸ்போ அண்ட் புட் கார்னிவெல் நிகழ்ச்சி 3 நாட்கள் நடக்கிறது. சிறு,குறு, தொழில் நிறுவனங்களின் புதிய தயாரிப்புகள், நவீன மற்றும் பாரம்பரிய உணவுகள் இடம் பெறும் உணவு திருவிழா நடக்கிறது. சிறப்பு கலை நிகழ்ச்சிகள், பெண்களுக்கான தொழில் முனைவோர் முகாம், தொழில் சார்ந்த கருத்தங்குகள், வேலை தேடும் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
இடம்: கோவை ரத்தினம் கிராண்ட் எக்ஸ்போ ஹால்.தேதி: 8 முதல் 10 ம் தேதி வரை.:
பைக்ரேஸ் கோவையில் முதல் முறையாக பிரமாண்டமான ‘டர்ட் டிராக் பைக்ரேஸ்’ நடக்கிறது. பல மாநிலங்களில் இருந்து பைக்ரேஸ் வீரர்கள் பங்கேற்கின்றனர். 2 நாட்கள் நடக்கும் இந்த பைக் பந்தயத்துக்கு அனுமதி இலவசம்.
இடம்: கோவை புதுார் ரீங்ரோடு நெய்யல் கிரவுண்ட்தேதி: 8:
கட்டுமான கண்காட்சி பேர்புரோ கட்டுமான துறை கண்காட்சி 3 நாட்கள் நடக்கிறது. சிவில் இன்ஜினியர்ஸ், கட்டுமான ஒப்பந்ததாரர்கள், பிளம்பர்ஸ், எலக்டீரிசியன்கள் என, 35 ஆயிரத்துக்கும் அதிகமான துறை சார்ந்த வல்லுனர்கள், வாடிக்கையாளர்கள் கண்காட்சியை பார்வையிட உள்ளனர். புதிய வீடுகள், அப்பார்ட்மென்ட்கள் மற்றும் அலுவலங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் இக்கண்காட்சியில் இடம்பெற உள்ளன.
இடம்: கொடிசியா: தேதி; 7:
கவிதை ஊர்வலம் வசந்தவாசல் கவிமன்றம் சார்பில் நுால் விமர்சனம் மற்றும் கவிதை ஊர்வலம் நிகழ்ச்சி நடக்கிறது. ராஜேந்திரபாபு எழுதிய ‘முத்தொள்ளாயிர மோகனம்’ நுால் குறித்த விமர்சன உரை, ‘மின்மினி கவிதைகள்’ என்ற தலைப்பில் கருத்துரை வழங்கப்படும். கவிதை ஊர்வலத்தில் கவிஞர்கள் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்று கவிதை வாசிக்க உள்ளனர்.
இடம்: கோவை உற்பத்தித்திறன் குழு அரங்கு:
இலக்கிய சொற்பொழிவு ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், தமிழ் மணம் கமழும் மனங்களின் சங்கமமாக, தமிழ் இலக்கியத் திருவிழா நடக்கிறது. மூன்று நாட்கள் நடக்கும் இந்நிகழ்ச்சியில், பல்வேறு தலைப்புகளில் கவிஞர்கள், இலக்கிய சொற்பொழிவாளர்கள் இலக்கிய உரையாற்றுகின்றனர்.
இடம்: கிக்கானி மேல்நிலைப்பள்ளி அரங்கம்தேதி: 7:
மராத்தான் ஓட்டம்
மாவட்ட போலீஸ் சார்பில், ‘முடிவின் துவக்கம்’ என்ற தலைப்பில் மராத்தான் நடக்கிறது. பங்கேற்பாளர்களுக்கு ஒரு லட்சம் வரை பரிசு வழங்கப்படுகிறது. அனுமதி இலவசம் வாய்ப்பு உள்ளவர்கள் பங்கேற்கலாம்.
இடம்: வெஸ்டன் பைபாஸ் ரீங் ரோடுதேதி: 8, காலை 5.00 மணி நாணய கண்காட்சி சேர, சோழ, பாண்டியர், பல்லவர் காலத்து செவ்வியல் நாணயவியல் மாநாடு மற்றும் கண்காட்சி கோவையில் நடக்கிறது. இந்த கண்காட்சி பலங்காலத்து நாணயங்கள், அரிய வகையான பொருட்கள், பணத்தாள் உள்ளிட்ட பல பொருட்கள் இடம் பெரும். நாணய சேமிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் பங்கேற்கலாம்.
இடம்: ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் மஹால்:
