/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரம்ஜான் சிறப்பு தொழுகை ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
/
ரம்ஜான் சிறப்பு தொழுகை ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
ADDED : ஏப் 11, 2024 06:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: இஸ்லாமியர்களின் ஒரு பிரிவான, 'ஜாக் கமிட்டி' சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை, குனியமுத்துார் ஆயிஷா மகாலில் நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
ரம்ஜான் மாதம் முழுதும் நோன்பு இருந்து, ஏழை எளியவர்களுக்கு உதவி செய்து, இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுகின்றனர். இஸ்லாமியர்களின் ஒரு பிரிவான 'ஜாக் கமிட்டி' சார்பில் நேற்று, ரம்ஜான் சிறப்பு தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில், ஆயிரக்கணக்கான இஸ்லாமியர் புத்தாடைகள் அணிந்து, வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். சுன்னத் ஜமாத் சார்பில், இன்று ரம்ஜான் கொண்டாடப்படுகிறது.

