ADDED : ஜூன் 27, 2026 05:50 PM
அ நிறம் | அளவு
பேரூர்: பச்சாபாளையம், கோவை கார்டனை சேர்ந்தவர் வினோத்குமார், 31.
அதே பகுதியில் பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்றுமுன்தினம், கடையில் இருந்த பழைய பேன், கம்பி போன்றவற்றை, மூவர் திருடிக் கொண்டிருந்தனர். அப்போது, கடைக்கு சென்ற வினோத்குமார், அருகிலிருந்தவர்களின் உதவியுடன் மூவரையும் பிடித்து பேரூர் போலீசாரிடம் ஒப்படைத்தார். விசாரணையில் அவர்கள், தெலுங்குபாளையத்தை சேர்ந்த சஞ்ஜீவன்,29, ஜெகன், 29, ஆண்டிபாளையத்தை சேர்ந்த சஞ்சய்,24 எனத் தெரிந்தது. மூவரும் கைது செய்யப்பட்டனர்.
