/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
8 கிலோ கஞ்சாவுடன் மூன்று பேர் கைது
/
8 கிலோ கஞ்சாவுடன் மூன்று பேர் கைது
ADDED : ஆக 12, 2024 08:42 PM
கோவை:கோவை, காந்திபுரம் அருகே, 8 கிலோ கஞ்சாவுடன், மூவரை கைது செய்த போலீசார் மேலும் இருவரை தேடுகின்றனர்.
கோவை, காந்திபுரம் திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்ட் அருகே, காட்டூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, இரண்டு இரு சக்கர வாகனங்களில் சந்தேகத்துடன் நின்று கொண்டிருந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சின்னா(எ)சின்னசாமி,27, மருதுபாண்டி,20, மற்றும் கோவை, ரத்தினபுரியில் வசிக்கும் கேரள மாநிலம் இடுக்கியை பூர்வீகமாக கொண்ட ஜோய்ஸ் ஜோசப்,30, ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, 8 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது. மூவரையும் கைது செய்த போலீசார், கஞ்சா, இரண்டு இரு சக்கர வாகனங்கள், மூன்று மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.
இவர்களிடம் நடத்தப்பட் விசாரணையில், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மோட்டா அண்ணன் என்பவர் கஞ்சா விற்பனை செய்வதும், ராஜா என்பவர் கஞ்சாவை கைமாற்றுவதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, இந்த இருவரையும் போலீசார் தேடிவருகின்றனர்.