சி.டி.சி.ஏ., டிவிஷன் போட்டி மூவருக்கு மூன்று விக்கெட்
சி.டி.சி.ஏ., டிவிஷன் போட்டி மூவருக்கு மூன்று விக்கெட்
ADDED : ஜூலை 23, 2026 04:00 PM
அ நிறம் | அளவு
கோவை: மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில் இரண்டாவது டிவிஷன் போட்டி, சூர்யபாலா கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. ஜாலி ரோவர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினர் 46.1 ஓவரில் 143 ரன் எடுத்தனர். நரேன் கார்த்திகேயன் 43, சர்வேஸ் 36 ரன் எடுத்தனர்.
எதிரணியின் தினேஷ் மற்றும் சக்திவேல் ஆகியோர் தலா மூன்று விக்கெட் வீழ்த்தினர். ஆர்.கே.எஸ். கிரிக்கெட் அகாடமி அணியினர் 41.5 ஓவரில் 144 ரன் எடுத்து வெற்றி பெற்றனர். எதிரணியின் நரேன் கார்த்திகேயன் மூன்று விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து போட்டிகள் நடக்கின்றன.
