/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அத்திக்கடவு திட்டத்தில் இணைத்தும் பயனடையாத தொட்டியனுார் குளம்
/
அத்திக்கடவு திட்டத்தில் இணைத்தும் பயனடையாத தொட்டியனுார் குளம்
அத்திக்கடவு திட்டத்தில் இணைத்தும் பயனடையாத தொட்டியனுார் குளம்
அத்திக்கடவு திட்டத்தில் இணைத்தும் பயனடையாத தொட்டியனுார் குளம்
ADDED : ஆக 06, 2024 11:41 PM

அன்னுார் : அத்திக்கடவு திட்டத்தில் சேர்க்கப்பட்டும், தொட்டியனுார் குளத்துக்கு, ஒரு சொட்டு நீர் கூட வரவில்லை.
தொட்டியனுாரில், 28 ஏக்கர் பரப்பளவு குளம் உள்ளது. இந்த குளத்தில் நீர் நிரம்பினால், சுற்றுவட்டாரத்தில் விவசாய நிலங்கள் பயன்பெறும்; நிலத்தடி நீர்மட்டம் உயரும். இந்தக் குளம் அத்திக்கடவு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. குளத்தின் ஒரு பகுதி பிள்ளையப்பம்பாளையம் ஊராட்சியிலும், மற்றொரு பகுதி மசக்கவுண்டன்செட்டிபாளையம் ஊராட்சியிலும் அமைந்துள்ளது.
இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், 'அத்திக்கடவு திட்டத்தில் சேர்க்கப்பட்ட குளங்களில், பெரும்பாலான குளங்களில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு விட்டது. ஆனால் சோதனை ஓட்டம் துவங்கி ஒன்றரை ஆண்டு ஆகிவிட்டது. ஆனால், எங்கள் குளத்திற்கு இதுவரை ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. குளத்திற்கு வரும் வழியில் பிரதான குழாயில் ஒவ்வொரு சோதனை ஓட்டத்தின் போதும் உடைப்பு ஏற்பட்டு விடுகிறது. தண்ணீர் குளம் போல் தேங்கி அருகில் உள்ள தோட்டங்களுக்குள்ளும் பள்ளங்களிலும் சென்று வீணாகிறது. இதனால் குளத்திற்கு இதுவரை ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை.
குன்னத்துராம்பாளையத்தில் உள்ள அத்திக்கடவு திட்ட நீரேற்று நிலையத்திலும், கோவை கலெக்டர் அலுவலகத்திலும் புகார் தெரிவித்துள்ளோம். கடந்த இரண்டு நாட்களாக, அத்திக்கடவு திட்ட சோதனை ஓட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே, தொட்டியனூர் குளத்துக்கு வரும் குழாய் உடைப்பை சரி செய்து, குளத்தில் நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.