/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'அம்பாளை அடைய பிரபஞ்சத்தை புரிந்து கொள்ள வேண்டும்'
/
'அம்பாளை அடைய பிரபஞ்சத்தை புரிந்து கொள்ள வேண்டும்'
'அம்பாளை அடைய பிரபஞ்சத்தை புரிந்து கொள்ள வேண்டும்'
'அம்பாளை அடைய பிரபஞ்சத்தை புரிந்து கொள்ள வேண்டும்'
ADDED : ஆக 15, 2024 03:27 AM

கோவை : கோவை, ராம் நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம் சார்பில் நேற்று, 'அபிராமி அந்தாதி' என்ற தலைப்பில், ஆன்மிக சொற்பொழிவாளர் கிருஷ்ண ஜகந்நாதன் சொற்பொழிவாற்றினார்.
இதில், கிருஷ்ண ஜகந்நாதன் பேசுகையில்,'' பிரபஞ்சம் என்பது பஞ்சபூதங்களால் ஆனது. பஞ்சபூதத்தில், ஆகாயத்திற்கு ஒரு குணம் உண்டு, அது சத்தம். ஆகாயத்திலிருந்து வந்த வாயுவிற்கு, சத்தம் மற்றும் தொடுதல் என்ற இரு குணம் உண்டு.
வாயுவில் இருந்து வந்த அக்னிக்கு, சத்தம், தொடுதல், உருவம் என்ற மூன்று குணம் உள்ளது. நீருக்கு, சத்தம், தொடுதல், உருவம், சுவை ஆகிய நான்கு குணங்கள் உள்ளன. நிலத்திற்கு, சத்தம், தொடுதல், உருவம், சுவை, வாசனை ஆகிய ஐந்து குணங்கள் உள்ளன.
இந்த பஞ்சபூதங்களை அடக்கிய பிரபஞ்சமே அம்பாள். இந்த பிரபஞ்சத்தை அம்பாளாக பார்த்தால், நமக்கு அனைத்தும் கிடைக்கும். அம்பாளை அடைய பிரபஞ்சத்தை புரிந்து கொள்ள வேண்டும், என்றார்.