ADDED : மார் 02, 2025 11:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு,; கிணத்துக்கடவு, காளியண்ணன்புதுாரைச்சேர்ந்தவர் சின்னதுரை, 35, மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக, கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து சின்னதுரை கடையில் போலீசார் சோதனை செய்தபோது, புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது உறுதியானது தொடர்ந்து, அவரிடம் இருந்து, 300 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்து வழக்கு பதிந்துள்ளனர்.