/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்று ஆவணி அவிட்டம் பூணுால் மாற்றும் வைபவம்
/
இன்று ஆவணி அவிட்டம் பூணுால் மாற்றும் வைபவம்
ADDED : ஆக 18, 2024 10:55 PM
கோவை;ஆவணி மாத பவுர்ணமி திதியும் அவிட்ட நட்சத்திரமும் இணைந்தும் வரும், இன்றைய தினம் ஆவணி அவிட்டமாக கொண்டாடப்படுகிறது.
இந்நாள் வேதங்கள் அவதரித்த நாளாகவும், மஹாவிஷ்ணு ஹயக்கிரீவராக அவதரித்த நாளாகவும், வேதங்களை அசுரர்களிடமிருந்து தேவர்கள் மீட்டதாக, புராணங்களில் சொல்லப்படுகிறது.
இன்றைய நாளில் நீர்நிலைகளிலும் கோவில்கள், திருமணமண்டபங்களில், புரோகிதர்கள் குழுக்களாக அமர்ந்து, மந்திரங்களை பாராயணம் செய்து, பூணுாலை மாற்றிக்கொள்வர். இதை 'உபாகர்மா' என்று அழைக்கின்றனர். இதற்கு, 'புனிதம் ஆரம்பம்' என்று பொருள்.
ஆவணி அவிட்டம் இன்று அதிகாலை 3:07 மணிக்கு துவங்கி, நள்ளிரவு 1:09 மணி வரை தொடர்கிறது. காலை 4:32 முதல் 5:20 மணி வரை, பிரம்ம முகூர்த்தத்தில் பெரும்பாலானோர் உபாகர்மா நிகழ்வை நடத்த திட்டமிட்டுள்ளனர். மறுதினம் காயத்ரி ஜெபம் மேற்கொள்ளப்படுகிறது.