/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்று சிவராத்திரி: கோவில்களில் சிறப்பு பூஜை
/
இன்று சிவராத்திரி: கோவில்களில் சிறப்பு பூஜை
ADDED : பிப் 25, 2025 11:51 PM
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள சிவன் கோவில்களில், சிவராத்திரி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள விருதாம்பிகை சமேத விருத்தபுரீஸ்வரர் கோவிலில் சிவராத்திரி விழாவையொட்டி இன்று இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
முதல் கால பூஜை மாலை, 6:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரையும், இரண்டாம் கால பூஜை இரவு, 10:00 மணி முதல் நள்ளிரவு, 12:00 மணி வரையும், மூன்றாம் கால பூஜை நள்ளிரவு,1:00 மணி முதல் அதிகாலை, 3:00 மணி வரையும், நான்காம் கால பூஜை அதிகாலை, 4:00 மணி முதல் காலை, 6:00 மணி வரையும் நடக்கிறது. முதல் கால பூஜை முடிந்தவுடன் இரவு, 7:00 மணி முதல் அன்னதானம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இடிகரையில் உள்ள வேதநாயகி உடனமர் வில்லீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழாவை ஒட்டி இரவு, 7:00 மணி முதல், 8:00 மணி வரை முதல் கால சிவராத்திரி சிறப்பு வழிபாடும், இரவு, 8:00 மணி முதல், 9:30 மணி வரை லட்சிய நாட்டிய வித்யாலயா குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சியும், இரவு, 10:00 மணி முதல், 11:00 மணி வரை இரண்டாம் கால சிறப்பு பூஜையும், இரவு, 11:30 மணி முதல்,1: 30 மணி வரை ஓம் முருகா பஜனைக்குழுவின் பஜனை நடக்கிறது. இரவு, 2:00 மணி முதல், 3:00 மணி வரை மூன்றாம் கால சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. வியாழக்கிழமை காலை சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இடிகரை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
இதே போல துடியலூர் அருகே வடமதுரையில் உள்ள விருந்தீஸ்வரர் கோவிலிலும், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள், பஜனைகள் நடக்கின்றன.