/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்று 'தினமலர்' இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி கோவையில் நடக்கிறது; அனுமதி இலவசம்
/
இன்று 'தினமலர்' இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி கோவையில் நடக்கிறது; அனுமதி இலவசம்
இன்று 'தினமலர்' இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி கோவையில் நடக்கிறது; அனுமதி இலவசம்
இன்று 'தினமலர்' இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி கோவையில் நடக்கிறது; அனுமதி இலவசம்
ADDED : ஜூலை 06, 2024 12:23 AM
கோவை:'தினமலர்' நாளிதழ் சார்பில், இன்ஜி., மாணவர்களுக்கான கவுன்சிலிங் 2024 வழிகாட்டி நிகழ்ச்சி கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கில், இன்று (ஜூலை 6) நடக்கிறது.
அண்ணா பல்கலைக்கழகம் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., பி.டெக்., முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு, தமிழக அரசு சார்பில் கவுன்சிலிங் ஆன்லைனில் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்கும் மாணவர்கள், தங்களுக்கு விருப்பமான கல்லுாரி மற்றும் பாடப் பிரிவை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள் குறித்து, 'தினமலர்' நாளிதழ் வழிகாட்டுகிறது.
இதற்காக, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரியுடன் இணைந்து, 'தினமலர்' நாளிதழ் சார்பில், 'டி.என்.இ.ஏ., இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி -2024' என்ற நிகழ்ச்சி, தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடத்தப்பட உள்ளது.
கோவை, ஆர்.எஸ்.புரத்தில் இன்று (ஜூலை 6) இந்த நிகழ்ச்சி நடக்கிறது. கோவை ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரி மற்றும் கற்பகம் கல்வி நிறுவனத்தினர் இணைந்து, நிகழ்ச்சியை வழங்குகின்றனர்.
ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கும் இந்நிகழ்ச்சியில், அண்ணா பல்கலை மாணவர் சேர்க்கை முன்னாள் இயக்குநர் நாகராஜன், கல்வி ஆலோசகர் அஸ்வின் ஆகியோர், மாணவர்களுக்கான அனைத்து தகவல்களையும் வழங்க உள்ளனர்.
சிறந்த கல்லுாரி மற்றும் பாடப் பிரிவை தேர்வு செய்தல், 'கட் ஆப்' மதிப்பெண்ணின் முக்கியத்துவம், தரவரிசை, விருப்பப் பாட பிரிவை தேர்வு செய்யும் முறை, ஆன்லைன் கவுன்சிலிங்கின் விதிமுறைகள், வேலை வாய்ப்புகள் மிகுந்த இன்ஜினியரிங் பாடப் பிரிவுகள் போன்றவை குறித்த சந்தேகங்களுக்கு, நிபுணர்களிடம் விளக்கம் பெறலாம்.
இந்தாண்டு எந்த படிப்பிற்கு மவுசு அதிகம், என்ன படிப்பிற்கு என்ன எதிர்காலம், கோர் இன்ஜினியரிங் படிப்புகளுக்கு உள்ள வாய்ப்புகள், சிறந்த கல்லுாரியைத் தேர்வு செய்யும் வழிமுறைகள்... என அனைத்து சந்தேகங்களுக்கும் மாணவர்கள், பெற்றோர் விளக்கம் பெறலாம்.
அனுமதி இலவசம்.