ADDED : செப் 15, 2024 01:43 AM

உயர்ந்த பக்தி எது?
டெப்ரி இன்ஜினியரிங் சார்பில், 'உயர்ந்த பக்தி எது' என்ற தலைப்பில், அபங்க சங்கீர்த்தனம் ஹரிகதை நடக்கிறது. ராம்நகர், சத்தியமூர்த்தி ரோடு, ஸ்ரீ ராம்லட்சுமி ஹாலில், மாலை, 6:30 மணிக்கு நடக்கும் நிகழ்வில், ரகுநாத்தாஸ் மஹராஜ் சிறப்புரையாற்றுகிறார்.
பூமி திருவிழா
பேஸ் 4 அமைப்பு சார்பில், பூமியை கொண்டாட, 'தி எர்த் திருவிழா' நடத்தப்படுகிறது. சிறுவாணி ரோடு, இருட்டு பள்ளம், ஐராவணம் மலையோர பகுதியில் இயற்கை சூழலில், மாலை, 3:00 மணிக்கு நிகழ்ச்சி துவங்குகிறது. பூமியின் முக்கியத்துவம் குறித்த இசை, நாட்டுப்புற இசை, டி.ஜே., உள்ளிட்ட பல்வேறு இசைநிகழ்வுகள் நடக்கிறது.
சைமா தினம்
சைமா அமைப்பு சார்பில், 72வது சைமா தினம். ஆவாரம்பாளையம் கோஇந்தியா அரங்கத்தில், காலை, 10:30 மணிக்கு நடக்கிறது. இதில், உறுப்பினர்களின் குழந்தைகளை மகிழ்விக்க, பெட்டிக்கடை, பொம்மை தயாரிப்பு உள்பட பல்வேறு விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமைதியின் அனுபவம்
தியானம், அன்பு பகிர்தல், இயற்கை, நேர்மறை எண்ணம் ஆகியவற்றின் மூலம் மன அமைதியை அனுபவிக்கலாம். அண்ணாசாலை எதிரில், ஓசூர் ரோட்டில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில், இலவச வீடியோ சத்சங்கம் நடக்கிறது. 'நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற தலைப்பில், காலை, 11:00 மணிக்கு,சத்சங்கம் நடக்கிறது.
கலிக்கம் சிகிச்சை முகாம்
வள்ளலார் வைத்தியசாலை மற்றும் திருவடி திருவருட் செங்கோல் சபை வள்ளலார் ஆலயம் சார்பில், இலவச கண், மூக்கு, கலிக்கம் சிகிச்சை முகாம் நடக்கிறது. அன்னுார், சத்தி ரோடு, குன்னத்துார் ஊராட்சி அலுவலகத்தில் காலை, 10:00 முதல் மதியம், 2:00 மணி வரை முகாம் நடக்கிறது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.,நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது. குனியமுத்துார், டிவைன் மேரி சர்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.