ADDED : ஆக 03, 2024 06:44 AM

கதை கேளு கதை கேளு!
ராம்நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம் அரங்கில், வால்மீகி ராமாயணம் சொற்பொழிவு நிகழ்வு, மாலை, 6:30 மணி முதல் 8:30 மணி வரை நடைபெறுகிறது. ராமாயணம் என்பது பொதுவாகவே ஒரே கதை களம் கொண்டது. கம்ப ராமாயணத்தில் இருந்து, வால்மீகி ராமாயணம் சற்று மாறுபட்டு இருக்கும். அதன் நுணுக்கங்களை அறிந்துகொள்ள ஆர்வமுள்ளோர், இந்நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.
வீடு, வீட்டுமனை கண்காட்சி
நடுத்தர குடும்பங்களின் அதிகபட்ச கனவே, ஒரு வீடு வாங்கிவிடவேண்டும் என்பதுதான். உங்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கும் வகையில் நடக்கிறது. கோவை கொடிசியா அரங்கில் கிரெடாய் கண்காட்சி. வீடு, வீட்டு மனை வாங்கவும், வங்கிக்கடன் பெறவும் தேவையான தகவல்களை இங்கு பெறலாம். கொடிசியா ஹால் 'இ'ல் நடக்கும் இந்நிகழ்ச்சிக்கு, காலை, 10:00 முதல் இரவு 8:00 மணி வரை பங்கேற்கலாம்.
வர்த்தக கண்காட்சி
பிளாஸ்டிக், பேக்கிங், ரோபோ உள்ளிட்ட பல்துறை வர்த்தக கண்காட்சி கொடிசியா, ஏ-பி ஹாலில் நடக்கிறது. சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மிகவும் பயனுள்ள கண்காட்சியாக அமையும். இதில், காலை, 10:00 மணி முதல் பங்கேற்கலாம்.
விழிப்புணர்வு பேரணி
போதை பொருள் தடுப்பு மற்றும் குழந்தைகள் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பயணம் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காலை,5:30 மணியில் இருந்து துவங்குகிறது. பேரணியில் பங்கேற்கும் குழுவினர், 78 கி.மீ., பயணம் செய்து பி.ஆர்.எஸ்., மைதானத்தில் முடிக்கின்றனர். ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்கலாம்.