/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சி
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சி
ADDED : ஆக 03, 2024 09:54 PM

சுத்தம் என்பதை மறந்தால்...!
நேற்று பேரூர் படித்துறையில் முன்னோர் வழிபாடுகள் இனிதாக முடிந்துவிட்ட நிலையில், அங்கு சேர்ந்த இலைகளை சுத்தம் செய்ய இணைந்துள்ளனர், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர். இன்று காலை, 6:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை நடக்கும் துாய்மைப்பணியில் நம் எதிர்கால சந்ததியருக்காக நாமும் இணைவோம். பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுவோம். இடம் பேரூர் படித்துறை. இப்பணியில் இணைய, 80157 14790 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தாய்மையை போற்றுவோம்
உலக தாய்பால் வார தின விழாவை முன்னிட்டு, விமன் சென்டர் மற்றும் கோவை ரோட்டரி கிளப் சார்பில் வாக்கத்தான் விழிப்புணர்வு நிகழ்வு நடக்கிறது. ரேஸ்கோர்ஸ் சாலையில், 6:30 மணியளவில் நிகழ்வு துவங்குகிறது. தாய்ப்பால் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் நடைபெறும் இந்த நிகழ்வில், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்கலாம்.
நவீனத்தின் கவிதை முகம்
புலம் தமிழ் இலக்கியப் பலகை சார்பில், நவீனத்தின் கவிதை முகம் என்ற தலைப்பில் சிறப்பு கவியரங்கம் இன்று நடக்கிறது. காலை 10:00 மணியளவில் காந்தி பார்க் பகுதியில் உள்ள, மாரண்ண கவுடர் உயர்நிலை பள்ளியில் நிகழ்வு துவங்குகிறது.
கீதாபஜன்
வெள்ளலுார் ஸ்ரீ உமா மகேஸ்வரர் ஆலயத்தில் கீதாபஜன், பிருந்தாவன நாட்டிய நிகழ்வு இன்று மாலை, 5:00 மணியளவில் நடைபெறவுள்ளது.
தற்காப்பு கலை
தமிழரின் சிலம்ப கலைக்கூடம் மற்றும் சிலம்பம் தற்காப்பு கலை ஆராய்ச்சி பயிற்சி மையம் சார்பில், முதலாமாண்டு சிலம்பம் போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன. நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், காலை, 8:00 மணிக்கு போட்டிகள் துவங்கவுள்ளன. கம்பெடுத்து சொல்லியடிக்கும் வீரர்களின் திறமைகளை இங்கு காணலாம்.
நாட்டியாஞ்சலி
இன்போசிஸ் பவுண்டேஷன் மற்றும் பாரதீய வித்யா பவன் சார்பில், வர்ஷா நாட்டிய அரங்கேற்ற நிகழ்வு, ஆர்.எஸ்.புரம் பவன் அரங்கில் நடைபெறவுள்ளது. மாலை, 5:15 முதல் 8.25 மணி வரை, மூன்று நாட்டிய பள்ளிகளின் அரங்கேற்ற அசத்தல் நடனத்தை காண இந்நிகழ்வில் பங்கேற்கலாம்.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.,நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது.
* குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.
அமைதியின் அனுபவம்
தியானம், அன்பு பகிர்தல், இயற்கை, நேர்மறை எண்ணம் ஆகியவற்றின் மூலம் மன அமைதியை அனுபவிக்கலாம். அண்ணாசாலை எதிரில், ஓசூர் ரோட்டில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில், இலவச வீடியோ சத்சங்கம் நடக்கிறது. 'நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற தலைப்பில், காலை, 11:00 மணிக்கு, சத்சங்கம் நடக்கிறது