/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : ஏப் 21, 2024 01:20 AM

சித்திரைப் பெருந்திருவிழா
அவிநாசி ரோடு, தண்டுமாரியம்மன் கோவிலில், சித்திரைப் பெருந்திருவிழா நடக்கிறது. காலை, 10:30 மணிக்கு, சிங்கை வள்ளி கும்மியாட்டம் நடக்கிறது. மாலை, 6:30 மணிக்கு, ஆன்மிக பட்டிமன்றம் மற்றும் இரவு, 8:00 மணிக்கு, சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது.
ஆண்டுப் பெருந்திருவிழா
ஒத்தக்கால்மண்டபம், பூங்கோதையம்மன் புற்றிடங்கொண்டீசர் கோவிலில், 15ம் ஆண்டு பெருந்திருவிழா நடக்கிறது. குதிரை வாகனத்தில் பிறை சூடிப் பெருமான் பிராட்டியுடன் கற்பகம் மருத்துவக்கல்லுாரி அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு, மாலை, 6:00 மணிக்கு திருவீதி உலா நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு, வேடுபரி நடக்கிறது.
சித்திரைத் திருவிழா
குனியமுத்துார், அறம்வளர்த்த அம்மன் கோவிலில், சித்திரைத் திருவிழா நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு, அம்மன் விரதம் நிறைவு, அபிஷேக, அலங்கார பூஜை மற்றும் பூச்சொரிதல் நடக்கிறது.
கும்பாபிஷேக விழா
மேட்டுப்பாளையம், தாசம்பாளையம், அலர்மேல் மங்கை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலில், மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது. காலை, 8:00 மணி முதல், முதல் கால ஹோமங்கள், மதியம், 1:00 மணி முதல், மகாஅபிஷேகம், அலங்கார திருமஞ்சனம் நடக்கிறது. மாலை, 6:00 மணி முதல், திவ்யபிரபந்தம், பூர்ணாஹுதி, கும்பப் புறப்பாடு நடக்கிறது.
தென்கைலாயநாதர் திருவிழா
பேரூர், பட்டீசுவரசுவாமி கோவிலின் உபகோவிலான, தென்கைலாயநாதர் கோவிலில், மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது. காலை, 9:15 மணி முதல், புண்யாஹவாசனம் அனுக்ஞை, மகா தீபாராதனை நடக்கிறது. மாலை, 4:15 முதல் இரவு, 8:00 மணிக்குள், முதல் கால யாக பூஜை, மூலவர் அஷ்டபந்தன சாத்துப்படி, திருமுறை பாராயணம் நடக்கிறது.
விநாயகனை வழிபடுவோம்
குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் -1, கம்பீர விநாயகர் கோவிலில், கும்பாபிஷேக விழா நடக்கிறது. காலை, 5:00 முதல் இரண்டாம் கால பூஜை, காப்பு கட்டுதல், நாடிசந்தானம் நடக்கிறது.காலை, 9:00 முதல் 10:30 மணிக்குள், மகா கும்பாபிஷேக விழா மற்றும் மதியம், 12:00 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.
துவக்க விழா
கோவை மாவட்டப் பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின், 47ம் ஆண்டு துவக்கவிழா நடக்கிறது. ரயில்நிலையம் அருகே, அண்ணாமலை அரங்கத்தில், காலை, 10:45 மணிக்கு நிகழ்ச்சி நடக்கிறது. தமிழ் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் பலர் கலந்துகொள்கின்றனர்.
அமைதியின் அனுபவம்
தியானம், அன்பு பகிர்தல், இயற்கை, நேர்மறை எண்ணம் ஆகியவற்றின் மூலம் மன அமைதியை அனுபவிக்கலாம். அண்ணாசாலை எதிரில், ஓசூர் ரோட்டில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில், இலவச வீடியோ சத்சங்கம் நடக்கிறது. 'நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற தலைப்பில், காலை, 11:00 மணிக்கு, சத்சங்கம் நடக்கிறது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.,நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது. குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.

