sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

/

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்


ADDED : ஆக 10, 2024 11:37 PM

Google News

ADDED : ஆக 10, 2024 11:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கல்யாணத் திருவிழா


கோவில்மேடு, வேலாண்டிபாளையம், நீலியம்மன் கோவிலில், 17ம் ஆண்டு பால்குடம் மற்றும் திருக்கல்யாணத் திருவிழா நடக்கிறது. காலை, 9:00 மணிக்கு அபிஷேக பூஜையும், காலை, 10:45 மணி முதல் திருக்கல்யாணமும் மற்றும் மதியம், 12:00 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது.

தங்கக்கவசம் அணிவித்தல்


தென்னமநல்லுார், கரிய காளியம்மன் கோவில், வீரமாச்சி அம்மன் திருமேனிக்கு, தங்கக்கவசம் அணிவித்தல் விழா நடக்கிறது. காலை 8:00 மணி முதல், தங்க கவசம் எடுத்து வந்து சிறப்பு வேள்வி வழிபாடு, அபிஷேகம், கலச அபிஷேகம் நடக்கிறது. காலை, 10:30 மணி முதல், தங்க கவசம் அணிவித்தல், அலங்கார பூஜை நடக்கிறது.

ஆடித்தீக்குண்டம் திருவிழா


தடாகம் ரோடு, கே.என்.ஜி.புதுார் பிரிவு பேருந்து நிறுத்தம் அருகே அமைந்துள்ள திரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவிலில், உலக நலன் வேண்டி, 13ம் ஆண்டு ஆடித்தீக்குண்டம் திருவிழா நடக்கிறது. இன்று மாலை, 5:00 மணிக்கு குத்துவிளக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

கல்வி விழா


ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின், 'கற்கை நன்றே' கல்வி விழா நிகழ்ச்சி, சத்தி ரோடு, வளியாம்பாளையம் பிரிவு, எம்.கே.வி., டவர், ஸ்வர்ணா ஹாலில் நடக்கிறது. காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை, கல்வி ஊக்கத்தொகை திட்டம், திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் புத்தக வாசிப்பு, யோகா மற்றும் தியான வகுப்புகள் நடக்கின்றன.

நட்பு விழா


ஒத்தக்கால்மண்டபம் மேல்நிலைப்பள்ளியில், 'நட்பு விழா' என்ற பெயரில், முன்னாள் மாணவர்கள் சந்தித்துக்கொள்கின்றனர். விழாவில், 1994ம் ஆண்டு படித்த மாணவர்கள் இணைந்து, பள்ளி வளர்ச்சிக்கு நிதி அளிக்கும் திட்டத்தில் இணைதல், மாணவர்களுக்கு இருக்கை அமைத்தல், மரக்கன்றுகள் நடுதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

இசை நிகழ்ச்சி


சரஸ்வதி மற்றும் சங்கர ஐயர் நினைவு இசைநிகழ்ச்சி, ராம்நகர், கோதண்டராமசுவாமி கோவிலில் நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு நடக்கும் நிகழ்வில், மாண்டலின் ராஜேஷ் இசை நிகழ்ச்சி நிகழ்த்துகிறார்.

'சுதந்திர தின' நாடகம்


வடவள்ளி, சின்மயா வித்யாலயா பள்ளி சார்பில், 78வது சுதந்திர தினம் குறித்த தெரு நாடக நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. ரேஸ்கோர்சில், காலை, 7:00 முதல் 9:00 மணி வரை தெரு நாடக நிகழ்வை, மாணவர்கள் அரங்கேற்றுகின்றனர்.

பரதாஞ்சலி


குருகுலம் சர்வதேச நிறுவனம் சார்பில், 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 'பாரதத்திற்கு பரதாஞ்சலி' என்ற தலைப்பில், கிளாசிக்கல் நடன நிகழ்ச்சி நடக்கிறது. சுந்தராபுரம், செங்கப்பகோனார் திருமண மண்டபத்தில், காலை, 8:00 மணி முதல் நிகழ்ச்சி நடக்கிறது.

நம்ம ஊரு சந்தை


இயற்கை மற்றும் சிறு தானிய உணவு என பாரம்பரிய வாழ்வியலை உணர்த்தும், 'நம்ம ஊரு சந்தை', கோவையில் நாளை கூடுகிறது. இயல்வாகை அமைப்பு சார்பில், காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, மேம்பாலம் அருகில், மாநகராட்சி பள்ளியில், காலை, 10:00 முதல் மாலை, 3:00 மணி வரை நடக்கிறது.

யோகாசனப் போட்டிகள்


ஓம் யோகசிகிச்சை அறக்கட்டளை சார்பில், பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான யோகாசனப் போட்டிகள் நடக்கின்றன. ஆர்.எஸ்.புரம் பாரதீய வித்யா பவனில், காலை, 11:00 மணி முதல் போட்டிகள் நடக்கின்றன.

திருக்குறள் பயிலரங்கு


திருக்குறள் உலகம் கல்விச்சாலை சார்பில், திருக்குறள் பார்வையில், 'ஆற்றலின் வலிமைகள்' என்ற தலைப்பில் நேரடிப் பயிலரங்கம் நடக்கிறது. பூமார்க்கெட், சுவாமி விவேகானந்தர் இல்லப் பள்ளி வளாகத்தில், மாலை 6:30 மணி முதல் பயிலரங்கு நடக்கிறது.

48ம் ஆண்டு விழா


சுந்தராபுரம், மாச்சம்பாளையத்தில், நண்பர்கள் அன்பு நுாலகத்தின், 48வது ஆண்டு விழா நடக்கிறது. மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையேயான பேச்சு மற்றும் பாட்டு போட்டிகள் நடக்கிறது. மாச்சம்பாளையம், மாரியம்மன் கோவில் மைதானத்தில், காலை, 10:00 மணி முதல் போட்டிகள் நடக்கிறது.

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


ஆலாந்துறை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு இன்று பள்ளி வளாகத்தில் காலை, 9:30 மணிக்கு நடக்கிறது. 1986ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள், 38 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொள்கின்றனர். தொடர்ந்து, 11:00 மணி முதல், தொண்டாமுத்துார் ரோடு, வெஸ்டர்ன் வேலி ரிசார்ட்டில் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

கட்டுமானத்துறை கண்காட்சி


அன்னுார் லாரி உரிமையாளர்கள் சங்க திருமண மண்டபத்தில், கட்டுமானத்துறை கண்காட்சி நடக்கிறது. காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை நடக்கும் கண்காட்சியில், வங்கிகளின்வீட்டுக்கடன் திருவிழா, கட்டுமானப் பொருட்களின் கண்காட்சி, வீட்டு அலங்கார பொருட்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்


ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது. குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.

கண் பரிசோதனை இலவச முகாம்


அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், குறிச்சி கிளை மற்றும் கோவை டிரினிட்டி கண் மருத்துவமனை இணைந்து, இலவச கண் பரிசோதனை முகாமை நடத்துகின்றன. குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் -1 விரிவாக்கத்தில், ஐயப்பன் கோவில் பஜனை மண்டபத்தில், காலை, 10:00 முதல், மதியம், 2:00 மணி வரை நடக்கிறது.

நாஞ்சில் நாடன் விருது


சிறுவாணி வாசகர் மையம் சார்பில், 'நாஞ்சில் நாடன்' விருது வழங்கும் விழா நடக்கிறது. பீளமேடு, பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரியின் 'டி' அரங்கத்தில் நிகழ்ச்சி நடக்கிறது. நாஞ்சில் நாடன் தலைமை தாங்கும் விழாவில், கவிஞர் இசைக்கு, விருது வழங்கப்படுகிறது.

'எலக்ட்ரோடெக்' கண்காட்சி


அவிநாசி ரோடு, கொடிசியா தொழிற்கண்காட்சி வளாகத்தில், 'எலக்ட்ரோடெக் 2024' என்ற தலைப்பில், எலக்ட்ரிக்கல் மற்றும் தொழில்முறை எலக்ட்ரானிக்ஸ் கண்காட்சி நடக்கிறது. காலை, 10:00 முதல் 3:00 மணி வரையும், பொதுமக்கள், மாலை, 3:00 முதல், 5:00 மணி வரையும் பங்கேற்கலாம்.






      Dinamalar
      Follow us