/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : ஆக 23, 2024 09:11 PM

பெருந்திருவிழா
ஆடிஸ் வீதி, வ.உ.சி.,வளாகத்தில் உள்ள கருமாரியம்மன் கோவிலில், பெருந்திருவிழா நடந்து வருகிறது. இறுதி நாளான இன்று, காலை, 9:00 மணிக்கு, 108 சங்காபிஷேகம் நடக்கிறது. மதியம், 12:00 மணிக்கு, மகா அன்னதானம் நடக்கிறது.
சாமானியருக்கும் அரசியல் அறிவு
கனவு தமிழ்நாடு இயக்கத்தின் புதிய முயற்சியாக, 'அரசியல் அறிவு' என்ற முன்னெடுப்பு தொடங்கப்படவுள்ளது. சாமானிய மக்களுக்கு அரசியலமைப்பு, சட்டமன்றம், நீதிமன்றம், உள்ளாட்சி போன்ற அடிப்படை அரசியலை கற்பிப்பதே நோக்கமாகும். இதன் முன்னோட்ட நிகழ்வு, மசாக்காளிபாளையம் ரோடு, ஓட்டல் செயோன் பிளாசாவில், காலை, 10:00 மணி முதல் நடக்கிறது.
ஓவியக் கண்காட்சி
கஸ்துாரி சீனிவாசன் அறநிலையம், நடப்பாண்டு, 'ரிதமிக் பேலட்' தொடர் என்ற பெயரில், ஓவியக் கண்காட்சிகளை நடத்தி வருகிறது. இத்தொடரின் 218வது ஓவியக் கண்காட்சி அவிநாசி ரோடு, கஸ்துாரி சீனிவாசன் கலை மையத்தில் நடக்கிறது. காலை, 10:00 முதல் மாலை, 6:30 மணி வரை, படைப்புகள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்படுகிறது.
கேரியர் வழிகாட்டுதல் திட்டம்
ஒத்தக்கால்மண்டபம், இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், கேரியர் வழிகாட்டுதல் திட்டம் நடக்கிறது. 'கல்வித் திறனைத் மேம்படுத்துவது, எலைட் பல்கலை வேலைவாய்ப்புகளுக்கான யுக்திகள்' என்ற பெயரில், கேரியர் வழிகாட்டுதல் திட்டம், காலை, 11:00 மணிக்கு துவங்குகிறது.
பிரமாண்ட நாட்டிய நிகழ்ச்சி
விளாங்குறிச்சி ரோடு, விஸ்வேஸ்வரா நகர், ஸ்ரீ தர்மசாஸ்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் நடக்கிறது. இதையொட்டி, பள்ளியில் படிக்கும் 200 மாணவர்கள் இணைந்து, இரண்டு மணி நேரம், பிரமாண்ட நாட்டிய நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.
சங்கம் தொடக்க விழா
பச்சாபாளையம், ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரியில், இயந்திரவியல் துறை சங்கம் தொடக்க விழா நடக்கிறது. கல்லுாரியின், கருத்தரங்கு கூடத்தில், காலை, 10:00 முதல் 11:30 மணி வரை நிகழ்ச்சி நடக்கிறது.
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
பொள்ளாச்சி, நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரியில், 1982 முதல் 85 வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடக்கிறது. ஆனைக்கட்டி, எஸ்.ஆர். ஜங்கிள் ரிசார்டில், மதியம், 1:00 மணி முதல் நிகழ்ச்சிகள் நடக்கிறது. சந்திப்பு, குடும்பத்தினருடன் கொண்டாட்டம், நிலவின் ஒளியில் உணவு என பல்வேறு நிகழ்வுகள் நடக்கின்றன.
வனவியல் மற்றும் பட்டுவளர்ப்பு
மேட்டுப்பாளையம், வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், வனவியல் மற்றும் பட்டு வளர்ப்பு குறித்து தொழில் வழிகாட்டல் பயிலரங்கு நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு தொடங்கும் நிகழ்வில், கர்நாடக மருத்துவ தாவரங்கள் ஆணையத்தின், தலைமை நிர்வாக அலுவலர் வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.
கிருஷ்ண தரிசன கண்காட்சி
பெரியகடை வீதியில் உள்ள பூம்புகாரில், கிருஷ்ணர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, கிருஷ்ண தரிசன கண்காட்சி நடக்கிறது. கிருஷ்ணரின் திருவுருவம் கொண்ட பஞ்சலோகம், கருப்பு மற்றும் வெள்ளை உலோக சிலைகள், தஞ்சை ஒவியங்கள் என பல பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கண்காட்சி, காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை நடக்கிறது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.,நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது. குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.
பள்ளி ஆண்டு விழா
ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில், 162வது ஆண்டு விழா நடக்கிறது. மாலை, 4:30 மணிக்கு துவங்கும் விழாவில், கோவை எம்.பி.,ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். பல்வேறு கலைநிகழ்வுகளை மாணவர்கள் அரங்கேற்றுகின்றனர். சிறந்த மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுகிறது.