/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : ஆக 24, 2024 11:44 PM

ஆன்மிகத் தேடல்
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், ஆன்மிக சொற்பொழிவு ராம்நகர், ராமர்கோவிலில் நடக்கிறது. மாலை, 6:30 மணிக்கு, 'பிறவிப்பயன்' ஆன்மிகத் தேடல் என்ற தலைப்பில், ஆன்மிக பேச்சாளர் கிருஷ்ணா சொற்பொழிவாற்றுகிறார். முன்னதாக, மாலை, 6:00 மணிக்கு, ரமண சத்சங்கம் நடக்கிறது.
கிருஷ்ண ஜெயந்தி விழா
கோவில்மேடு யாதவர் இளைஞர் அணி சார்பில், 12ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நடக்கிறது. காலை, 6:00 மணி முதல், சுதர்சன ஹோமம், அபிஷேக பூஜை, மஹாரண்யம் நடக்கிறது. மாலை, 3:00 மணி முதல், கீர்த்தன பஜனை, கோமாதா பூஜை பரதநாட்டியம், கிருஷ்ண சுவாமிக்கு ஊஞ்சல் தாலாட்டு நடக்கிறது.
மனம் எனும் மந்திரம்
செட்டிபாளையம், தாமரைக் கோவிலில், 76வது மாதாந்திரக் கூட்டம் நடக்கிறது. இதில், 'மனம் எனும் மந்திரம்' என்ற தலைப்பில், சொற்பொழிவு நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு நடக்கும் நிகழ்வில், சுயமுன்னேற்ற பேச்சாளர் சந்திரப்பிரியா உரையாற்றுகிறார்.
கோகுலாஷ்டமி விழா
விஷ்வ ஹிந்து பரிஷத் பஜ்ரங்கதள் அமைப்பு சார்பில், 12ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. சிவானந்தா காலனியில், மாலை, 5:00 மணிக்கு விழா நடக்கிறது.
களப்பணி
மதுக்கரை, பிள்ளையார்புரத்தில் நடப்பட்ட மரக்கன்றுகளை பராமரிக்கும் களப்பணி நடக்கிறது. கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில், 354வது தொடர் களப்பணி, காலை, 7:00 முதல் 9:30 மணி வரை நடக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
ஓவியக் கண்காட்சி
கஸ்துாரி சீனிவாசன் அறநிலையம், ரிதமிக் பேலட் தொடரின் 218வது ஓவியக் கண்காட்சி அவிநாசி ரோடு, கஸ்துாரி சீனிவாசன் கலை மையத்தில் நடக்கிறது. காலை, 10:00 முதல் மாலை, 6:30 மணி வரை, படைப்புகள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்படுகிறது.
பெண்ணுரிமை கருத்தரங்கு
நிர்மலா மகளிர் கல்லுாரி மற்றும் கம்போடியா தேசிய பாரா ஒலிம்பிக்குழு இணைந்து, 'பெண்ணுரிமைக்குரல், பெண்ணாற்றல், பெண் சமத்துவம் மற்றும் பெண் பாதுகாப்பு' என்ற தலைப்பில், சர்வதேச கருத்தரங்கை நடத்துகின்றன. கல்லுாரி வளாகத்தில், காலை, 10:00 மணிக்கு நடக்கும் கருத்தரங்கில், பெண் ஆளுமைகள் பலர் சிறப்புரையாற்றுகின்றனர்.
திருக்குறள் பயிலரங்கு
திருக்குறள் உலகம் கல்விச்சாலை சார்பில், தேவாங்கப் பேட்டை வீதியில் உள்ள சுவாமி விவேகானந்தர் இல்லப் பள்ளி வளாகத்தில், திருக்குறள் பயிலரங்கு நடக்கிறது. திருக்குறள் பார்வையில், தொழில் முனைவோர்க்கான ஐந்து திறன்கள் என்ற தலைப்பில் பயிலரங்கு, மாலை, 6:30 மணி முதல் நடக்கிறது.
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
பொள்ளாச்சி, நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரியில் 1982 முதல் 85 வரை படித்த மாணவர்கள் சந்திப்பு நடக்கிறது. ஆனைக்கட்டி, எஸ்.ஆர். ஜங்கிள் ரிசார்ட்டில், காலை, 6:30 மணி முதல், பசுமை வனத்தில் நடைபயணம், மனமகிழ்ந்த காலை, புகைப்பம் எடுத்தல், பரிசுகள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்கின்றன.
கராத்தே சாம்பியன்ஷிப்
33வது கோவை மாவட்ட கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகள், சப் -ஜூனியர், ஜூனியர், யு21 மற்றும் சீனியர் பிரிவுகளில் நடக்கின்றன. சரவணம்பட்டி, வெள்ளக்கிணறு, எஸ்.என்.எஸ்., அகாடமியின் இன்டோர் வளாகத்தில், காலை முதல் போட்டிகள் நடக்கின்றன
முப்பெரும் விழா
கோவை மாவட்டப் பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவை சார்பில், முப்பெரும் விழா நடக்கிறது. போத்தனுார், தென்னக ரயில்வே மனமகிழ் மன்றத்தில், காலை, 10:15 மணிக்கு விழா துவங்குகிறது. இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் பலர் கலந்துகொள்கின்றனர்.
அறக்கட்டளை துவக்கம்
நளினி வெள்ளியங்காட்டான் சமூக நல அறக்கட்டளை தொடக்க விழா, நவஇந்தியா, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில், காலை, 9:30 மணிக்கு நடக்கிறது. கவிஞர் வெள்ளியங்காட்டானின் படைப்புகளில், ஆய்வுப்பணி மேற்கொள்ளும் மாணவர்களுக்கு, ஊக்கத்தொகை அளிக்கும் நோக்கில் அறக்கட்டளை தொடங்கப்படுகிறது.
காயகல்பப் பயிற்சி
அன்னுார் மனவளக்கலை மன்றத்தில், காயகல்பப் பயிற்சி வகுப்பு நடக்கிறது. மாலை, 4:00 முதல் 6:00 மணி வரை வகுப்புகள் நடைபெறும். பெரியவர்களுக்கு ரூ.200 மற்றும், மாணவர்களுக்கு ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படும்.
இயற்கை வாழ்வியல்
கோவை இயற்கை நலச்சங்கம் சார்பில், இயற்கை வாழ்வியல் ஆரோக்கிய விழிப்புணர்வுக் கூட்டம் நடக்கிறது. அவிநாசி ரோடு, அண்ணாசிலை எதிரே, ஸ்ரீ சாய் கபே டி.கே.பி., சேம்பரில் காலை, 10:30 மணிக்கு கூட்டம் நடக்கிறது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது. குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.