sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

/

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்


ADDED : ஆக 31, 2024 11:14 PM

Google News

ADDED : ஆக 31, 2024 11:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆதித்தமிழர்கள் வரலாறு


'பாணர்கள் எங்கே போனார்கள்? ஆதித் தமிழர்களின் உண்மை வரலாற்றை உலகிற்கு சொல்லும் நுாலாகும். டி.கே.துரைசாமி கல்வி மையம் சார்பில், ஸ்ரீராம் ஆதித்தன் எழுதிய இந்த நுாலின் அறிமுகம் மற்றும் வெளியீட்டு விழா நடக்கிறது. ஓசூர் ரோடு, அண்ணாசிலை அருகேவுள்ள, ஆருத்ரா ஹாலில், காலை, 10:00 மணிக்கு நிகழ்ச்சி நடக்கிறது.

'உருமாறும் இந்தியா' மாநாடு


எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனங்கள் சார்பில், 'உருமாறும் இந்தியா' மாநாடு இன்று துவங்குகிறது. வெள்ளலுார், எஸ்.எஸ்.வி.எம்., சர்வதேச பள்ளியில், காலை, 8:45 மணிக்கு துவங்குகிறது. பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள், வல்லுனர்கள் உரையாற்றுகின்றனர்.

லேடீஸ் மிஸ் பண்ணிடாதீங்க!


டிரஸ், ஆக்சரிஸ்னு கடை,கடையாய் ஏறி இறங்க வேண்டாம். எல்லாம் ஒரே இடத்தில், எக்கச்சக்க வெரைட்டிகளில் கிடைக்கிறது, நம்ம, 'கோகிளாம்' ஷாப்பிங் கண்காட்சி, அவிநாசி ரோடு, ரெசிடன்சி டவர்சிலும், 'ஸ்டைல் பஜார்' கண்காட்சி, ரேஸ்கோர்ஸ் தாஜ் விவாந்தா ஓட்டலிலும் நடக்கிறது. காலை, 10:00 மணி முதல் கண்காட்சியை பார்வையிடலாம்.

மரபுவழி கால்நடை மருத்துவம்


ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில், கால்நடைகளுக்கு பாரம்பரிய மருத்துவ முறையில் வீட்டு அஞ்சறைப்பெட்டி மற்றம் தோட்டங்களில் கிடைக்கும், மூலிகைச் செடிகளைப் பயன்படுத்தியும் மருத்துவம் பார்க்க பயிற்சியளிக்கப்படுகிறது. செம்மேடு, ஈஷா இயற்கை பண்ணையில் இன்று காலை, 9:00 முதல் பயிற்சி நடக்கிறது.

மறக்காம டெஸ்ட் பண்ணிங்குங்க!


அனைத்து சமூக மக்களுக்கு உதவும் பேரவை மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், இலவச கண் பரிசோதனை முகாம் நடக்கிறது. தடாகம் ரோடு, சிவாஜி காலனியில், செயின்ட் பீட்டர்ஸ் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளியில் காலை, 8:30 முதல், 1:30 மணி வரை முகாம் நடக்கிறது.

விழிப்புணர்வு ஓட்டம்


கற்பகம் உயர்கல்வி நிறுவனங்கள் சார்பில், 'பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள்' குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு ஓட்டம் நடக்கிறது. நேரு மைதானம் எதிரே, வ.உ.சி., மைதானத்தில், காலை, 5:30 முதல் 8:30 மணி வரை நடக்கிறது.

25ம் ஆண்டு விழா


பெரியநாயக்கன்பாளையம் இசைத் தமிழ்ச் சங்கம் சார்பில், 25ம் ஆண்டு விழா நடக்கிறது. பெரியநாயக்கன்பாளையம், ஜோதிபுரம் பயனீர் கல்லுாரி திரு.தேவராஜன் கலையரங்கத்தில், காலை, 8:30 மணிக்கு துவங்குகிறது. இதில், இசை பயிலும் குழ்தைகளின் பாட்டு உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன.

கலிக்கம் முகாம்


சேவா பாரதி தென்தமிழ்நாடு சார்பில், இலவச கண், காது, மூக்கு கலிக்கம் முகாம், சலிவன் வீதியில், மாரண்ண கவுடர் மெட்ரிக் பள்ளியில், காலை, 10:00 மணி முதல் நடக்கிறது. இதேபோல், இலவச கலிக்கம் முகாம், அன்னுார், பழைய பேருந்து நிறுத்தம் அருகே, சரவணா மஹாலில், காலை, 10:00 முதல் மதியம், 2:00 மணி வரை நடக்கிறது.

அமைதியின் அனுபவம்


தியானம், அன்பு பகிர்தல், இயற்கை, நேர்மறை எண்ணம் ஆகியவற்றின் மூலம் மன அமைதியை அனுபவிக்கலாம். அண்ணாசாலை எதிரில், ஓசூர் ரோட்டில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில், இலவச வீடியோ சத்சங்கம் நடக்கிறது. 'நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற தலைப்பில், காலை, 11:00 மணிக்கு, சத்சங்கம் நடக்கிறது.

இலக்கியச் சந்திப்பு


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் இலக்கியச் சந்திப்பு நடக்கிறது. ரயில்நிலையம் அருகே தாமஸ் கிளப்பில் காலை, 10:00 மணிக்கு நிகழ்ச்சி நடக்கிறது. கொத்தாளி, பிறகு, பிறழ்வி, கடவுளின் வீடு ஜப்தி செய்யப்படுகிறது உள்ளிட்ட நுால்கள் குறித்து இலக்கிய ஆர்வலர்கள் பேசுகின்றனர்.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்


ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது. குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.






      Dinamalar
      Follow us