/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நுண் பார்வையாளர்களுக்கு பயிற்சி: விதிமீறல் இருந்தால் தெரிவிக்க அறிவுரை
/
நுண் பார்வையாளர்களுக்கு பயிற்சி: விதிமீறல் இருந்தால் தெரிவிக்க அறிவுரை
நுண் பார்வையாளர்களுக்கு பயிற்சி: விதிமீறல் இருந்தால் தெரிவிக்க அறிவுரை
நுண் பார்வையாளர்களுக்கு பயிற்சி: விதிமீறல் இருந்தால் தெரிவிக்க அறிவுரை
ADDED : ஏப் 18, 2024 10:28 PM
- நமது நிருபர் -
ஓட்டுச்சாவடி விதி மீறல் இருந்தால், உடனடியாக பொது பார்வையாளருக்கு தெரியப்படுத்த வேண்டுமென, 'மைக்ரோ அப்சர்வர்'கள் (நுண் பார்வையாளர்கள்) அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு சட்டசபை தொகுதிகளில், 318 பதற்றமான ஓட்டுச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது. அத்தகைய சாவடிகளில், கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்காக, 'மைக்ரோ அப்சர்வர்'கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில், 318 ஓட்டுச்சாவடிகளை கண்காணிக்க, 127 'மைக்ரோ அப்சர்வர்' நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட தேர்தல் அலுவலர் கிறிஸ்துராஜ் தலைமையில், பொது பார்வையாளர் ஹிமான்சு குப்தா முன்னிலையில், 'மைக்ரோ அப்சர்வர்'களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
ஓட்டுச்சாவடிகளை, ஓட்டுப்பதிவுக்கு தயார் நிலையில் இருப்பதை, 'மைக்ரோ அப்சர்வர்'கள் உறுதி செய்ய வேண்டும்.
ஓட்டுப்பதிவு நாளில், குறித்த நேரத்திற்குள் ஓட்டுச்சாவடிகளில் இருக்க வேண்டும். ஓட்டுப்பதிவு துவங்கும் முன், ஓட்டுச்சாவடி மையத்தில், அனைத்து அடிப்படை வசதிகளும் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
மாதிரி ஓட்டுப்பதிவு நடைமுறை, பதற்றமான சாவடிகளில், அனைத்து நிகழ்வுகளையும் வீடியோ பதிவு செய்தல், ஓட்டுப் பதிவுக்கு முன்பும், பின்பும், ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு முறையாக சீல் வைத்திருப்பதை உறுதி செய்வது போன்ற நடை முறைகளை சரியாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
ஓட்டுப்பதிவு நாளில், ஓட்டுச்சாவடி நிலவரத்தையும், விதிமீறல் நடந்தாலும், உடனடியாக பொது பார்வையாளருக்கு தெரியப்படுத்த வேண்டும்.
ஓட்டுப்பதிவு நாளன்று, முழு நேரமும் கண்காணித்து, தேர்தல் பார்வையாளருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென, அறிவுறுத்தப்பட்டது.
தேர்தல் நாளில், 'மைக்ரோ அப்சர்வர்'களாக பணியாற்றுவோர், தபால் ஓட்டுப்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக, படிவம் -12 மூலமாக, தபால் ஓட்டு கேட்டு விண்ணப்பம் பெறப்பட்டது.

