மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி
மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி
ADDED : ஜூலை 10, 2026 06:53 PM
ஆனைமலை: ஆனைமலை தாலுகாவில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு முதற்கட்ட பயிற்சி முகாம், நா.மூ. சுங்கம் ராமு கலை அறிவியல் கல்லுாரியில் நடந்தது.
முகாமில், கணக்கெடுப்பாளர், மேற்பார்வையாளர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விளக்கினர்.
வருவாய்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. முதற்கட்டமாக, வீடுகள் குறித்து கணக்கெடுப்பு நடக்கிறது. அதில், கட்டடங்கள், சென்சஸ் வீடுகளுக்கு இலக்கமிடுதல் பற்றி விளக்கப்பட்டது.
கட்டட எண், சென்சஸ் வீட்டு எண், குடும்ப எண், குடும்ப தலைவரின் பெயர், பாலினம், குடும்பத்தினர் எண்ணிக்கை, குடிநீர் ஆதாரம், சமையலறை, காஸ் அல்லது மண்ணெண்ணைய் பயன்பாடு, கழிப்பிடம் குறித்த விபரம், கழிவறை வெளியேற்ற இணைப்பு உள்ளிட்ட, 33 வினாக்கள் கேட்கப்படும்.
மொபைல்செயலியில் விபரங்களை சேகரிக்க வேண்டும். கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுவோர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விளக்கப்பட்டது.
இவ்வாறு, கூறினர்.
