/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர்களுக்கு ஆதார் தன்னார்வலர்களுக்கு பயிற்சி
/
மாணவர்களுக்கு ஆதார் தன்னார்வலர்களுக்கு பயிற்சி
ADDED : மே 03, 2024 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:அனைத்து மாணவர்களும் பள்ளிகளிலேயே நேரடியாக ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கும் வகையில், ஆதார் மையங்களை அமைக்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. 'எல்காட்' உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இப்பணிக்காக கோவை மாவட்டத்தில், 'இல்லம் தேடி' தன்னார்வலர்கள் 37 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகள் திறந்த பின், ஆதார் மையங்கள் அமைக்கப்பட்டு, தன்னார்வலர்கள் வாயிலாக மாணவர்களுக்கு ஆதார் அட்டை எடுப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த ஆதார் பதிவுக்கு மாணவர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.