/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இரை விழுங்கிகள் வளர்ப்பு வரும் 19ம் தேதி பயிற்சி
/
இரை விழுங்கிகள் வளர்ப்பு வரும் 19ம் தேதி பயிற்சி
ADDED : மார் 12, 2025 11:28 PM
கோவை; தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில், பூச்சியியல் துறை வாயிலாக, ஒட்டுண்ணிகள், இரை விழுங்கிகள் வளர்ப்பு மற்றும் பயன்படுத்தும் முறைகள் குறித்த ஒரு நாள் பயிற்சி, வரும் 19ம் தேதி நடத்தப்படுகிறது.
இதில், ஒட்டுண்ணி வகைகள், ஊண் விழுங்கிகள், நெல் அந்துப்பூச்சி வளர்ப்பு முறை, டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணி வளர்ப்பு, புழு ஒட்டுண்ணி வளர்ப்பு, கண்ணாடி இறக்கை பூச்சி வளர்த்தல், பொறிவண்டு வளர்ப்பு, பயிர் பாதுகாப்பில் ஒட்டுண்ணிகள் மற்றும் இரை விழுங்கிகள் பயன்பாடு குறித்து, முக்கிய அம்சங்களாக விளக்கப்படுகின்றன.
பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர், வரும் 19ம் தேதி காலை 9:00 மணிக்குள், பூச்சியியல் துறைக்கு, தங்கள் செலவில் வந்து சேர வேண்டும்.
பயிற்சியில் கலந்து கொள்வதற்கு, ரூ.900 நேரடியாக, பயிற்சி நாளன்று செலுத்த வேண்டும். காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கும் பயிற்சிக்குப் பின், சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
விபரங்களுக்கு, 0422 - 6611214, 6611414 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.