தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்பாக்ஸ் / காலியிடத்தில் குப்பை; யார் செய்கிறார் இந்த தப்பை?

இன்பாக்ஸ் / காலியிடத்தில் குப்பை; யார் செய்கிறார் இந்த தப்பை?

இன்பாக்ஸ் / காலியிடத்தில் குப்பை; யார் செய்கிறார் இந்த தப்பை?


ADDED : ஜூலை 20, 2026 05:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 20, 2026 05:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

1. ரோடு ஆக்கிரமிப்பு குனியமுத்துார் ஆண்டவர் காலனியில், ரோட்டில் கட்டப்பட்டுள்ள வீட்டு படிக்கட்டுகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

–யுவராஜ்:

2. சிக்னல்கள் இயங்க வேண்டும் பேரூர் மெயின் ரோடு இ.பி.ஆபீஸ் அருகில் இரு பக்கமும் ரோடு வளைவாக உள்ளது. வாகனங்கள் மிக வேகமாக செல்கின்றன. எச்சரிக்கை சிக்னல் இயங்குவதில்லை.

–பாலகிருஷ்ணன்:

3. ரோடு மோசம் பீளமேடு காந்தி மாநகர் வின்சென்ட் ஸ்கூல் எதிரில் ரோடு மோசமாக உள்ளது. வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர்.

–நடராஜன்: 4. தரமற்ற ரோட்டால் சுவாச கோளாறு சீரநாயக்கன்பாளையம், தியாகி குமரன் வீதியில், தரமற்ற முறையில் போடப்பட்ட ரோட்டால், வாகனங்கள் செல்லும் போது சிமென்ட் துாசி பறந்து சுவாசக் கோளாறு ஏற்படுகிறது.

–ஹேமலதா: 5. தெருவிளக்கு சரிசெய்ய வேண்டும் பீளமேடு பாரதி காலனி மெயின் ரோட்டில், இரு மாதங்களாக தெருவிளக்கு எரியவில்லை. இரவில் வெளியே செல்லவே அச்சமாக உள்ளது.

–தேவராஜ் ஸ்ரீனிவாசலு: 6. மோசமான ரோட்டால் அவதி மலுமிச்சம்பட்டி சமத்துவ விநாயகர் கோவில் ரோடு மோசமாக உள்ளதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.

–செல்வநாகராஜன்: 7. குப்பையால் துர்நாற்றம் வார்டு எண் 52, பீளமேடு அண்ணா நகர் ஆறுமுகம் லே–அவுட்டில் காலியிடத்தில் குவிக்கப்படும் குப்பையால் துர்நாற்றம் வீசுகிறது.

–வரதராஜ்:

8. ஒளிரா விளக்கு சவுரிபாளையம் ரத வீதியில் மூன்று மாதங்களாக தெரு விளக்கு எரியவில்லை. மின்வாரியத்தில் புகார் அளித்தும் பயனில்லை.

–சிவகாளி:

9. ஆக்கிரமிப்பு கழிப்பறை உடையாம்பாளையம் தொட்டிச்சியம்மன் கோவில் வீதியில் ரோட்டை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கழிப்பறையை அகற்ற வேண்டும்.

–வெங்கடலட்சுமி:

10. இரும்பு கம்பியால் ஆபத்து சரவணம்பட்டி எஸ்.என்.எஸ்.கலைக் கல்லூரி அருகே, ரோட்டின் மேல் நீட்டியுள்ள இரும்பு கம்பிகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

–மணிமாறன்:

11. கான்கிரீட் கலவையால் விபத்து அபாயம் வெள்ளக்கிணறு அருகே ரோட்டோரத்தில் மீதமுள்ள கான்கிரீட் கலவை கொட்டப்படுவதால், விபத்து அபாயம் உள்ளது.

–சாஸ்தா:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us