ADDED : ஜூலை 27, 2026 05:02 PM
அ நிறம் | அளவு
கோவை: சோமையம்பாளையத்தில் உள்ள பில்ட் டெக் மைதானத்தில் 14 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நடந்தது.
இதில், பில்ட் டெக், மருதம், கிரேஸ் 11ஸ் அகாடமி ஆகிய ஆகிய மூன்று அணிகள் பங்கேற்றன. பில்ட் டெக் அகாடமி அணி அனைத்து போட்டிகளிலும் வென்று முதலிடம் பிடித்தது.
கிரேஸ் 11ஸ் அகாடமியின் சம்யுக்தா இரு போட்டிகளில் 106 ரன் குவித்து சிறந்த பேட்ஸ்மேன் விருதை வென்றார். அதே அணியை சேர்ந்த ஜிஷ்ணு சின்ஹாக் 4 விக்கெட் வீழ்த்தி, சிறந்த பந்துவீச்சாளர் விருது பெற்றார். வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.
