/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்தவர்களுக்கு கவுரவம்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்தவர்களுக்கு கவுரவம்
மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்தவர்களுக்கு கவுரவம்
மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்தவர்களுக்கு கவுரவம்
ADDED : ஆக 07, 2024 11:41 PM
கோவை: கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த தனிநபர் மற்றும் சேவை நிறுவனங்கள், விருது பெற விண்ணப்பிக்கலாம்.
கலெக்டர் கிராந்திகுமார் கூறியுள்ளதாவது:
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக, சிறப்பாக சேவை புரிந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு, மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரம் வழங்கும் அமைச்சகத்தால், தேசிய விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகின்றனர்.
அதன்படி மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக தொண்டாற்றிய தனி நபர், குறைபாடுள்ள சிறந்த மாற்றுத்திறனாளிகள், ஏதேனும் ஒரு துறையில் முன்மாதிரியாக சிறந்து விளங்கும் மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சிறப்பாக சேவை புரியும் தனிநபர், அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்குபவர்கள், தன்னாட்சி அமைப்புகள் மற்றும் தனியார் துறைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரியும் தனியார் போக்குவரத்து அமைப்பு, விருது பெற விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விபரங்களை, www.disabilityaffairs.gov.in என்ற முகவரியிலும், விண்ணப்பங்களை www.awards.gov.in என்ற முகவரியிலும் வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கோவையை சேர்ந்த நிறுவனங்கள் நேரடியாக, கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
இவ்வாறு, அறிக்கையில் கூறியுள்ளார்.