ADDED : ஜூன் 03, 2026 09:21 PM
அ நிறம் | அளவு
பெ.நா.பாளையம்: அ.தி.மு.க.,வினர் ஒற்றுமையாக இருக்க வலியுறுத்தி, தஞ்சாவூரில் தீக்குளித்து உயிரிழந்த அ.தி.மு.க., நிர்வாகி பூக்கடை மகேந்திரன் திருவுருவப் படத்துக்கு, கோவை புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஜோதிபுரத்தில் நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
அ.தி.மு.க., புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் அருண்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., செல்வராஜ், ஒன்றிய செயலாளர் ஜெயராமன், பேரவை செயலாளர் நாசர் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
