/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சென்டர்மீடியனில் மோதி லாரி விபத்து; அதிர்ஷ்டவசமாக டிரைவர் தப்பினார்
/
சென்டர்மீடியனில் மோதி லாரி விபத்து; அதிர்ஷ்டவசமாக டிரைவர் தப்பினார்
சென்டர்மீடியனில் மோதி லாரி விபத்து; அதிர்ஷ்டவசமாக டிரைவர் தப்பினார்
சென்டர்மீடியனில் மோதி லாரி விபத்து; அதிர்ஷ்டவசமாக டிரைவர் தப்பினார்
ADDED : மே 29, 2024 11:48 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே கோட்டாம்பட்டியில், நேற்று அதிகாலை சென்டர்மீடியனில் மோதி சரக்கு லாரி விபத்துக்கு உள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சியில் இருந்து திருப்பூர் நோக்கிய வழித்தடத்தில், கோட்டாம்பட்டி வரையிலான சாலையில் சென்டர்மீடியன் கற்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, சரக்கு ஏற்றி வந்த லாரி, கோட்டாம்பட்டி அருகே வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலை நடுவே உள்ள சென்டர்மீடியன் மீது மோதி விபத்துக்கு உள்ளானது.
இதில் லாரியின் ஒருசில பகுதிகள் நொறுங்கின. டிரைவர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விபத்தில் சிக்கிய லாரியை பொக்லைன் இயந்திரம் கொண்டு, மீட்டனர். விசாரணையில், டிரைவர் துாக்கக்கலக்கத்தில் இருந்ததும் தெரியவந்தது.
போலீசார் கூறியதாவது:
சாலை நடுவே சென்டர் மீடியன் அமைக்கப்பட்டிருப்பதாலும், ஆங்காங்கே ரிப்ளக்டர் சிக்னல், சிறிய அளவிலான வேகத்தடை உள்ளிட்ட எச்சரிக்கை அறிவிப்புகள் காணப்படுகின்றன.
மேலும், சாலை ஓரத்தில் 'டிரக் பே' அமைக்கப்பட்டும் வருகின்றன. அவ்வாறு, இருக்கையில், கனரக வாகன ஓட்டுநர்கள், துாக்கம் வருவது தெரிந்தால், சற்று நேரம் ஓய்வு எடுத்துச் செல்லலாம். அதிகாலை விபத்து நிகழ்ந்ததால் உயிர்ப்பலி தவிர்க்கப்பட்டது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.