/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'சவால்களை வளர்ச்சிக்கான வாய்ப்புகளாக மாற்றணும்'
/
'சவால்களை வளர்ச்சிக்கான வாய்ப்புகளாக மாற்றணும்'
ADDED : செப் 09, 2024 01:37 AM

கோவை:ஈச்சனாரி, ரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தில், முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக தன்னம்பிக்கை பேச்சாளர் பர்வீன் சுல்தானா பங்கேற்றார்.
அவர் பேசுகையில், ''மாணவர்கள் தங்கள் இலக்குகளை அடைய தயக்கம், அச்சமின்றி போராட வேண்டும். சவால்களை வளர்ச்சிக்கான வாய்ப்புகளாக கருதி வாழ்க்கையில் முன்னேற வேண்டும்,'' என்றார்.
ரத்தினம் குழும நிறுவனங்களின் தலைவர் மதன் செந்தில், ''மாறிவரும் உலகிற்கேற்ப திறன்கள் மற்றும் அறிவுடன், மாணவர்களை மேம்படுத்துவதே எங்கள் நோக்கம்,'' என்றார்.
ரத்தினம் கல்வி குழுமங்களின் இயக்குனர் ஷிமா, சி.இ.ஓ., மாணிக்கம், துணைத் தலைவர் நாகராஜ், ஸ்போர்ட்ஸ் அகாடமி இயக்குனர் ராமன் விஜயன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் பங்கேற்றனர்.