ADDED : ஆக 30, 2024 10:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:ராமநாதபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது, சிவராம் நகர் சந்திப்பில் சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்களிடம் கஞ்சா மற்றும் போதை மாத்திரை இருப்பது தெரிந்தது.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் திருச்சி ரோடு, ஹைவேஸ் காலனியை சேர்ந்த ஜான் ஜோசப், 33, பீளமேட்டை சேர்ந்த அஜித் குமார் என்பதும், கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து, ஒரு கிலோ 590 கிராம் கஞ்சா, வலி நவாரணி மாத்திரரைகள், மொபைல் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.