/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சட்ட விரோதமாக மது விற்ற இருவர் கைது
/
சட்ட விரோதமாக மது விற்ற இருவர் கைது
ADDED : செப் 17, 2024 10:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில், சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக, போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
கோவில்பாளையம் டாஸ்மாக் பார் அருகே, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆறுமுகம், 39, என்பவரிடம் இருந்து, 120 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. முள்ளுப்பாடி டாஸ்மாக் பார் அருகே புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ், 32, என்பவரிடம் இருந்து, 140 மதுபான பாட்டில்கள் என, மொத்தம் 260 மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சட்ட விரோதமாக மதுபானம் விற்றதாக, இருவரையும் கைது செய்தனர்.