ADDED : ஜூலை 05, 2026 11:52 PM
சூலூர்: சூலூரைச் சேர்ந்த 33 வயது பெண், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, நான்கு வயது மகனுடன், தாய் வீட்டில் வசிக்கிறார்.
இப்பெண்ணின் வீட்டுக்கு அருகில், திண்டுக்கல் மாவட்டம் நல்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த அந்தோணி மரிய ராபின்,28 வசிக்கிறார். அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி, பாலியல் ரீதியாக பழகி வந்துள்ளார்.
இந்நிலையில் அந்தோணிக்கு திருமண ஏற்பாடு நடப்பதை அறிந்து அப்பெண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அந்தோணி, திருச்சியைச் சேர்ந்த தனது நண்பர் கிரீஷை, 28, வரவழைத்துள்ளார். இருவரும் சேர்ந்து அப்பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து, பாலியல் வன்கொடுமை செய்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் புகாரின் பேரில், கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் போலீசார் அந்தோணி மரிய ராபின், கிரீஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
