ADDED : ஜூன் 26, 2026 05:11 PM
அ நிறம் | அளவு
தொண்டாமுத்தூர்:
தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் சங்கர்,42; அ.தி.மு.க., நகர செயலாளர். வாய்க்கால் வழியில் உள்ள இவரது தோட்டத்தில் நேற்று காலை சங்கர் தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். மோட்டார் ஓடவில்லை. மின்மோட்டாரில் ஒயர் திருடப்பட்டிருந்தது.
அப்பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித் திரிந்த வட மாநிலத்தவரிடம் விசாரணை செய்தபோது, அவர் அசாமை சேர்ந்த முக்ஷிதுல் இஸ்லாம்,26 என்பதும், ஒயரை திருடி ராஜ்குமார் என்பவரின் பழைய இரும்பு கடையில், 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்றதும் தெரிந்தது.
அந்நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்து புகாரளித்தனர். ஒயரை திருடிய முக்ஷிதுல் இஸ்லாம் மற்றும் திருட்டு பொருளை வாங்கிய பழைய இரும்பு வியாபாரி ராஜ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
