/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யானை தந்தம் விற்க முயன்ற இருவர் கைது
/
யானை தந்தம் விற்க முயன்ற இருவர் கைது
ADDED : மே 04, 2024 12:26 AM

வடவள்ளி;கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட, வடவள்ளி பகுதியில், சட்டவிரோதமாக யானை தந்தம் விற்க முயற்சிப்பதாக, வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கோவை வனச்சரகர் திருமுருகன் தலைமையிலான குழுவினர், தேர்தல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
வடவள்ளியில், ஒரு யானை தந்தத்துடன் இருந்த இருவரை, பிடித்து விசாரணை செய்தனர். அவர்கள் வடவள்ளியை சேர்ந்த பிரிட்டோ,43 மற்றும் செல்வராஜ்,38 என்பதும், யானை தந்தத்தை சட்டவிரோதமாக விற்க முயன்றதும், சாய்பாபா காலனியை சேர்ந்த விசாகன் என்பவரது வீட்டில், யானை தந்தம் வைத்திருந்ததும் தெரியவந்தது.
இச்சம்பவத்தில், நல்லாம்பாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கும், தொடர்பு உள்ளது தெரிய வந்தது. யானை தந்தத்தை பறிமுதல் செய்து, பிரிட்டோ மற்றும் செல்வராஜை வனத்துறையினர் கைது செய்தனர்.
தலைமறைவாக உள்ள விசாகன் மற்றும் கார்த்திகேயனை வனத்துறையினர் தேடி வருகின்றனர். பிரிட்டோவின் வீட்டில், மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு மான் கொம்புகளை பறிமுதல் செய்தனர்.